1990-களில் நடிகர் பிரசாந்த் நடிப்பில் வெளி வந்த வைகாசி பொறந்தாச்சு என்ற திரைப்படத்தில் பிரசாந்துக்கு ஜோடியாக நடித்த நடிகை காவேரி மெட்டி ஒலியில் தனமாக நடித்திருந்தார்.
இந்த படத்தினை அடுத்து இவர் விஜயசேதுபதி ஐபிஎஸ், படிக்கிற வயசுல போன்ற படங்களில் நடித்த பிறகு திரைப்பட வாய்ப்புகள் கிடைக்காத காரணத்தினால் 1995-க்கு பிறகு சீரியல்களில் நடிக்க ஆரம்பித்தார்.
அந்த வகையில் இவர் மெட்டிஒலி, அரசி, மீரா, வம்சம், காயத்ரி போன்ற சீரியல்களில் முன்னணி கேரக்டர் ரோல் செய்து மக்கள் மனதில் இடம் பிடித்தார். 2013-ஆம் ஆண்டில் ராகேஷ் என்பவரை திருமணம் செய்து கொண்டு திரை உலகை விட்டு முற்றிலும் நீங்கினார்.
இதனை அடுத்து அண்மையில் பேட்டி ஒன்றில் பேசி இருந்த இவரது தோற்றத்தை பார்த்து அனைவரும் அதிர்ந்து விட்டார்கள். 45 வயதே ஆன நிலையில் முகம் சுருங்கி ஆள் அடையாளம் தெரியாத அளவிற்கு அவரா? இவர் என்று கேட்கக் கூடிய நிலையில் இவரது தோற்றம் இருந்தது.
இதற்கு இவர் பதில் அளிக்கும் போது தனக்கு தைராய்டு பிரச்சனை இருந்ததின் காரணத்தால் அதிகப்படியான வெயிட் போட்டதை அடுத்து நிறைய மாத்திரைகளை எடுத்துக் கொண்டிருக்கிறார். கடைசியாக ஒரு காலகட்டத்தில் மாத்திரையை நிறுத்திய உடன் உடல் எடை 8 கிலோ வரை குறைந்துவிட்டது.
அதன் பிறகு எடை கூடவே இல்லை என்று கூறினார்.
மேலும் 10 ஆண்டுகளாக எந்த ஒரு தொடர்பு இல்லாமல் அவர் வீட்டுக்குள்ளே இருந்ததாகவும், நண்பர்கள் யாரும் இல்லாத நிலையில் எந்த ஒரு செய்தியும் இவருக்கு தெரியவில்லை என்ற கருத்தை கூறியிருக்கிறார்.
இதனை அடுத்து இவரது அண்மை புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் அனைவரும் அட காவிரியின் உருவம் இப்படி ஆகிவிட்டதே என்று ஷாக் ஆகிவிட்டார்கள்.