அழகில் அம்மா-வை மிஞ்சும் பிரணிதா-வின் மகள்..! - வைராலகும் க்யூட் போட்டோஸ்..!

 

பொற்கி என்ற கன்னட திரைப்படத்தில் 2010 ல் அறிமுகமான பிரணிதா சுபாஷ் தமிழில் நடிகர் கார்த்தி நடிப்பில் வெளிவந்த சகுனி திரைப்படத்தின் மூலம் அறிமுக நாயகியாக அறிமுகம் படுத்தப்பட்டார். தமிழில் முதல் படத்திலேயே அமகளமான நடிப்பை வெளிப்படுத்திய இவருக்கு தமிழில் மேலும் சில படங்களில் நடிக்க கூடிய வாய்ப்பு கிடைத்தது. 

ஆனால் இவர் எதிர்பார்த்த அளவு அந்த படங்கள் இவருக்கு நல்ல பெயரை பெற்று தரவில்லை. இதனை அடுத்து தமிழ் படங்களில் நடிப்பதை விடுத்து தெலுங்கு படங்களில் நடித்து முன்னணி நடிகையாக திகழக்கூடிய இவர் தெலுங்கிலும் வாய்ப்பு கிடைக்காமல் போனதை அடுத்து திருமணம் செய்து கொண்டு பிள்ளை குட்டியோடு செட்டில் ஆகிவிட்டார். 

அந்த வகையில் இவருக்கு ஓர் அழகான பெண் குழந்தை உள்ளது. பிரசவத்திற்கு பின்பு தனது உடலை கட்டுக்கோப்பாக வைத்துக்கொள்ள தொடர் உடற்பயிற்சிகள் செய்து பார்ப்பதற்கு ஸ்லிம்மாக காட்சி அளித்து வரும் பிரணிதா சமூக வலைதளங்களில் படு அக்டிவாக இருப்பவர். 

அந்த வகையில் தற்போது சமூக வலைத்தளத்தில் அவர் போட்டிருக்கும் போட்டோஸ் ரசிகர்களின் மனதை கொள்ளை அடித்து விட்டது என்று கூறலாம். இதற்கு காரணம் ஒரு வயதை ஆகும் தன் மகளுக்கு கடற்கன்னி போல உடைய அணிந்து அழகு பார்த்த போட்டோக்களை தான் வெளியிட்டு இருக்கிறார். 


இந்த போட்டோவில் குட்டி தேவதையாக இருக்கும் பிரணிதாவின் மகள் பார்ப்பதற்கு படு கியூட்டாக இருப்பதாக இணையதள வாசிகள் கூறி இருப்பதோடு பிரணிதாவையும் பாராட்டி இருக்கிறார்கள். பார்ப்பதற்கு படு கியூட்டான உடையில் இவரது பெண் இருப்பதால் இந்த புகைப்படத்தை தொடர்ந்து இணையத்தில் அனைவரும் பார்த்து வருகிறார்கள். 

ஈடு இணையில்லா மழலையின் மகத்தான இந்த பேன்சி டிரஸ் அனைவரது மனதிலும் இடம் பிடித்து விட்டது. நீங்களும் இந்த புகைப்படத்தை பார்த்தால் கட்டாயம் லைக் போடாமல் செல்ல மாட்டீர்கள். உங்கள் கண்களுக்கு விருந்தாக இருக்கும் இந்த புகைப்படம் கண்டிப்பாக உங்களுக்கு பிடிக்கும். 

 அதிலும் இந்த பாப்பா கையில் பிஸ்கட்டை வைத்துக் கொண்டு எதை நினைத்து அழுகிறது என்று தெரியாமல் அழகாகத் தந்திருக்கும் போஸ் தான் அனைவரையும் கவர்ந்துள்ளது. மேலும் சில ரசிகர்கள் குட்டி பிரணிதாவிற்கு தீபாவளி வாழ்த்துக்களையும் தெரிவித்து அவர் கேட்காமலேயே அதிக அளவு லைக் கொடுத்திருக்கிறார்கள்.