பாக்யராஜை இதுக்கு கூட யூஸ் பண்ண மாட்றாங்க..! கோபத்தில் பேசிய பிரபல இயக்குனர்..!

 

தமிழ் சினிமாவில் தன்னுடைய புதுமையான இயக்கத்தின் மூலம் புரட்சியை ஏற்படுத்திய நடிகர் மற்றும் இயக்குனர் பாக்யராஜை கூறலாம். இவர் 16 வயதினிலே என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகுக்கு உதவி இயக்குனராக அறிமுகமானார். 

பின்னர் தொடர்ந்து பல படங்களில் உதவி இயக்குனராக பணிபுரிந்த பாக்யராஜ், சொந்தமாக பட தயாரிப்பில் ஈடுபட்டு சுவரில்லா சித்திரங்கள் என்ற திரைப்படத்தில் இயக்குனராக அறிமுகமானார். 

இவர் இயக்கத்தில் வெளி வந்த முந்தானை முடிச்சு, தாவணிக் கனவுகள் போன்றவை திரையுலகில் ஒரு மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்திய படங்கள் என கூறலாம். மேலும் 1980-களில் இவர் இயக்கிய சின்ன வீடு, ராசுகுட்டி போன்ற திரைப்படங்கள் ரசிகர்களின் மத்தியில் பேமஸான திரைப்படங்களாகவும் அவர்கள் ரசிக்கும் திரைப்படங்களாகவும் மாறியது. 

இவரைப் போலவே பல வெற்றி படங்களை கொடுத்த இயக்குனர் சுந்தர்ராஜ் பற்றி உங்களுக்கு நினைவில் இருக்கலாம். இவர் குறைந்த அளவு திரைப்படங்களை இயக்கியிருந்தாலும், இயக்கிய படங்களில் முக்கால்வாசி படங்கள் வெற்றியைத் தந்துள்ளது.

அந்த வகையில் இவர் அண்மை பேட்டி ஒன்றில் இயக்குனர் மற்றும் நடிகரான பாக்யராஜ் பற்றி சில விஷயங்களை பேசி இருக்கிறார். இதில் பாக்கியராஜ் தமிழ் சினிமாவை வேறொரு கோணத்தில் எடுத்துச் சென்றார். அதுமட்டுமல்லாமல் இவரால் தமிழ் சினிமா ஒரு படி மேலே சென்றது. 

ஆனால் இன்று இருக்கும் இளம் இயக்குனர்கள் பாக்கியராஜின் கதைகளை விரும்புவதில்லை. அத்தோடு அவர்களுக்கு உரிய ஸ்டைலில் தான் கதைகளை எடுத்து வருகிறார்கள். தமிழ் சினிமா இருக்கும் வரை பாக்யராஜை எப்போதும் மறந்து விடக்கூடாது. 

மேலும் எந்த ஒரு இயக்குனரும் படத்தை இயக்கும் போது அவர்கள் கதைகளை பாக்கியராஜோடு மரியாதை நிமித்தமாக அழைத்து விவாதம் செய்து கொள்ளலாம் என்ற கருத்தை வலியுறுத்திக் கூறி இருக்கிறார். 

இந்தப் பேட்டி பேச்சானது தற்போது ரசிகர்கள் மத்தியில் மட்டுமல்லாமல் இளம் இயக்குனர்களின் மத்தியிலும் பேசும் பொருளாக மாறி உள்ளது. இதனை அடுத்து இளம் இயக்குனர்கள் இயக்குனர் சுந்தர்ராஜனின் கருத்துக்கு முன்னுரிமை கொடுப்பார்களா? என்பது இனிவரும் நாட்களில் தெரியவரும்.