இணையத்தில் வெளியான ஆபாச காட்சிகள்..! பதறிப்போய் விளக்கம் கொடுத்த லோகி..!



திரை உலகில் இளம் இயக்குனராக தற்போது திகழும் லோகேஷ் கனகராஜ் மாநகரம் என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகம் ஆனார். இதனை அடுத்து இவர் கைது என்ற படத்தை இயக்கி மக்களின் கவனத்தை ஈர்த்தார். 

விஜய் உடன் மெகா கூட்டணியில் மாஸ்டர் படத்தை இயக்கினார். எனினும் அந்த படம் சொல்லக்கூடிய அளவு இவருக்கு பெயரை பெற்று தரவில்லை என்றாலும் தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனராக இவரை அடையாளப்படுத்தியது. 

இதனை அடுத்து இவர் உலகநாயகன் கமலஹாசனை வைத்து விக்ரம் என்ற படத்தை இயக்கினார். இந்த படம் மெகா ஹிட் படமாக அமைந்ததோடு மட்டுமல்லாமல் வசூலில் அதிக அளவு சாதனையை புரிந்தது. இந்த வெற்றி படத்திற்குப் பிறகு மீண்டும் விஜயோடு இணைந்து லியோ படத்தை இயக்கினார்.

இந்த படமும் கலவை ரீதியான விமர்சனத்தை பெற்று தந்தது. லியோ படத்தை தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை வைத்து தலைவர் 171 படத்தை இயக்க உள்ளார். இந்த நிலையில் இவர் தற்போது “ஜி ஸ்குவாட்” என்ற பட தயாரிப்பு நிறுவனத்தை துவங்கி தனது முதல் பட தயாரிப்பிற்கு தயாராகி விட்டார். 

அந்த வகையில் ஒரு உறியடி நாயகன் விஜயகுமார் நடிப்பில் உருவாக உள்ள ஃபைட் கிளப் என்ற படத்தை இன்று “ஜி ஸ்குவாட்” மூலம் வெளியிட திட்டமிட்டு இருக்கிறார்கள். இந்த சூழ்நிலையில் லோகேஷ் கனகராஜன் முகநூல் பக்கத்தில் ஆபாச வீடியோ ஒன்று வெளிவந்துள்ளது. 

இது குறித்து உடனுக்குடன் விளக்கம் அளித்திருக்கும் லோகேஷ் கனகராஜ் தனக்கு இன்ஸ்டாகிராம் மற்றும் X பக்கங்களில் மட்டுமே கணக்கு இருப்பதாகவும், வேறு எந்த பக்கத்திலும் கணக்கு இல்லை என்ற கருத்தை தெளிவாக கூறியிருக்கிறார்.