“தடை அதை உடை..” சின்மயிக்கு வாய்ப்பு..! - லோகேஷ் கனகராஜ் அதிரடி மூவ்..!

 

தமிழ் திரை உலகில் விக்ரம் படத்தின் மாபெரும் வெற்றியை அடுத்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் பிரமாண்டமான முறையில் வெளிவர இருக்கக்கூடிய தளபதி விஜயின் லியோ படம். இதற்கு முன்பு அவர் நடித்த படங்கள் ரசிகர்களின் எதிர்பார்ப்பை அந்த அளவு பூர்த்தி செய்யாத நிலையில், இந்தப் படம் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யக்கூடிய படமாக இருக்கும் என கருதப்படுகிறது. 

மேலும் இந்த படத்தில் நடிகர் விஜய்க்கு ஜோடியாக திரிஷா நடித்திருக்கிறார். இந்த படம் வருகின்ற அக்டோபர் 19ஆம் தேதி திரை அரங்குகளுக்கு வெளிவர உள்ள நிலையில், அக்டோபர் 18ஆம் தேதியே படத்தின் பிரீமியர் ஷோ நடக்க ஏற்பாடுகள் நடந்து வருகிறது. இதனை அடுத்து லியோ படத்தின் ப்ரோமோஷன் வேலைகள் படு மாஸாக நடந்து வருகிறது. 

இந்நிலையில் பலருக்கும் பலவிதமான பேட்டிகளை இந்த இந்தப் படப் பிரமோஷனுக்காக லோகேஷ் கொடுத்து வருகிறார். இத்தோடு சில சுவாரஸ்ய, சம்பவங்களையும் பகிர்ந்து கொள்கிறார். அந்த வகையில் தற்போது இவர் தடை விதிக்கப்பட்டிருக்கும் சின்மயிக்கு வாய்ப்பளித்தது குறித்து பேசி இருக்கிறார். 

மேலும் அவர் கூறுகையில் பாடகி சின்மயிக்கு இந்த படத்தில் டப்பிங் பேச டப்பிங் யூனியன் தடை விதித்திருந்த போதும் அந்த தடையை மீறி பேச வைத்திருக்கிறார். இதற்கு காரணம் இந்த படத்தில் விஜய்க்கும், திரிஷாவுக்கும் இடையே நிறைய ரொமான்ஸ் காட்சிகள் வந்துள்ளதாகவும், அதை மிகவும் சிறப்பாக அவர்கள் செய்திருப்பதாகவும் கூறியிருக்கிறார். 

இந்த காட்சிக்கு நியாயம் சேர்க்க வேண்டும் என்றால் நிச்சயம் சின்மயியை தான் டப்பிங் பேச வைப்பது தான் சிறப்பாக இருக்கும். எனவே அவர்களுக்கு விரிக்கப்பட்ட தடையைப் பற்றி நான் கவலை கொள்ளவில்லை. அவரது வாய்ஸ் தான் திரிஷாவின் கேரக்டருக்கு உயிர் கொடுக்கும் என நினைத்து தான் அவ்வாறு செய்தேன்.

ஏற்கனவே பல மொழிகளில் திரிஷாவிற்கு டப்பிங் அவர் பேசி இருப்பதால், இவரது குரல் இந்த படத்திற்கு மேலும் பக்க பலமாக இருக்கும் என்ற எண்ணத்தில் வாய்ப்பினை தந்திருக்கிறார். 

மேலும் தடையை மீறி தனக்கு வாய்ப்பளித்த லோகேஷ் மற்றும் தயாரிப்பாளர் லலிதுக்கு செம்மையை எக்ஸ் தளம் வழியாக நன்றியையும் தெரிவித்திருக்கிறார்.