உலகநாயகன் கமலஹாசனின் மூத்த மகளாக்கிய சுருதிஹாசன் தென்னிந்திய திரை உலகில் நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார். குறிப்பாக தெலுங்கு படங்களில் அதிக அளவு நடித்து வரக்கூடிய இவர் தமிழை பொறுத்த வரை ஏழாம் அறிவு என்ற திரைப்படத்தில் அறிமுகமானார்.
இதனை அடுத்து இவர் 3 படத்தில் நடித்த போது ரசிகர்களால் பெரிதும் விரும்பப்படும் நடிகைகளில் ஒருவராக மாறினார். பன்முக திறமையை கொண்ட சுருதிஹாசன் நடிப்பதோடு நின்று விடாமல் பின்னணி பாடகியாகவும் இருக்கிறார்.
மேலும் பல முன்னணி நாயகர்களோடு நடித்து தனது அப்பாவை போல பெயர் எடுத்து நிலையில் இருக்கும் இவர் அப்பாவை போலவே லிவிங் டூகதர் முறையில் தனது காதலனுடன் வாழ்ந்து வருகிறார்.
தற்போது இவர் பாலிவுட் டோலிவுட் படங்களில் நடித்து வருகிறார்.
இதனை அடுத்து மான்ஸ்டர் மெஷின் என்ற பாடலை பாடி படு பயங்கரமான நடனத்தை ஆடி அதை வீடியோவாக வெளியிட்டு இருக்கிறார்.
இந்த வீடியோவில் இவர் போட்டிருக்கும் ஆட்டத்தை பார்த்து பேய் படத்தில் வரும் பேயை விட மிகப் பெரிய ஆட்டமாக உள்ளது என்று ரசிகர்கள் நக்கலாக கமெண்ட் செய்திருக்கிறார்கள்.
மேலும் பலரும் பார்க்கும் வீடியோக்களில் இந்த வீடியோவும் ஒன்றாக தற்போது ட்ரெண்டிங் ஆகிவிட்டது என கூறலாம். ரசிகர்களால் தொடர்ந்து பார்க்கப்பட்டு வரும் எந்த வீடியோவிற்கு அதிக அளவு லைக் மற்றும் கமெண்ட்களும் கிடைத்துள்ளது.
இதனை அடுத்து தமிழ் படத்தில் எப்போது நீங்கள் நடிப்பீர்கள் என்பதை முக்கிய கேள்வியாக எழுதியிருக்கிறார்கள். இதற்கான விடையை விரைவில் அவர் தருவாரா? என்பதை இனி வரும் நாட்களில் தெரிந்து கொள்ளலாம்.