அடடா.. கீகீக்கு இப்படி ஒரு வியாதியா? உண்மையைப் பகிர்ந்த நடிகர் சாந்தனு..!

 

பிரபல இயக்குனரின் மகன் சாந்தனு பாக்யராஜ் என்பது உங்களுக்கு மிக நன்றாக தெரியும். இவர் பிரபலமான தொகுபாளினியாக திகழ்ந்த கீகீ என்கிற கீர்த்தியை கடந்த 2015 ஆம் ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்டார். 

இந்த பிரபல இயக்குனரின் மகன் சிறு வயதில் இருந்தே சினிமாவில் நடித்து வருகிறார். எனினும் இவருக்கு ஒரு சரியான பிரேக்கை கொடுக்கக்கூடிய திரைப்படம் இன்னும் அமையவில்லை என்று தான் கூற வேண்டும். 

சாந்தனு திருமணம் செய்து கொண்டிருக்க கூடிய கீர்த்தி பிரபல நடன இயக்குனர் ஜெயந்தி அவர்களின் மகள் என்பது குறிப்பிடத்தக்கது.இந்த ஜெயந்தி பெரிய குடும்பத்தில் இருந்து வந்தவர். மேலும் கலா மாஸ்டர், பிருந்தா மாஸ்டர் ஆகிய இருவரும் தான் ஜெயந்தியின் சகோதரிகள் என்பது குறிப்பிடத்தக்கது. 

அது மட்டுமல்லாமல் நடிகர் சாந்துனு ஒரு மிகப்பெரிய நடன இயக்குனர் என்பது எவருக்கும் தெரியாது. இந்த இளம் ஜோடிகள் சமூக வலைத்தளங்களில் பல வீடியோக்களையும், போட்டோக்களையும் வெளியிடுவதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார்கள். 

அந்த வகையில் நடிகர் சாந்தனு தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மனைவியை கலாய்த்து ஒரு வீடியோவை வெளியிட்டு இருக்கிறார். இந்த வீடியோவானது தற்போது பரவலாக அனைவராலும் பார்க்கப்படுகிறது. 

அதுமட்டுமல்லாமல் இந்த வீடியோவில் சாந்தனு தான் பயன்படுத்தும் பொருட்களை அங்கங்கே அப்படியே விட்டு சென்று விடுவார், அதை எடுத்து சீராக அவரது மனைவி அடுக்கி வைப்பார். 

இதனை அடுத்து இந்த வீடியோவில் என் மனைவிக்கு ஓசிடி பிரச்சனையில்லை. நாங்கள் ஒரு முரண்பட்ட ஜோடி அவ்வளவுதான். இது உங்களில் எத்தனை பேருக்கு தெரியும் என்ற கேள்வியும் எழுப்பி ரசிகர்களின் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி விட்டார்.