மொத்த படமும் எனக்கு மட்டுமா..? 2024ல் அனிருத்திற்கு எத்தனை படங்கள் தெரியுமா…?

 

இளம் இசையமைப்பாளராக கடந்த 2012 ஆம் ஆண்டு தனுஷ் நடிப்பில் வெளிவந்த 3 என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் திரை உலகில் களம் இறக்கப்பட்ட இசையமைப்பாளர் அனிருத், ஒய் திஸ் கொலை வெறி என்ற பாடலின் மூலம் உலக அளவு பிரபலமானார். 

இதனை அடுத்து பதினோரு ஆண்டு கால பயணத்தில் இவர் ராக் ஸ்டார் என்ற அந்தஸ்தை பெற்றதோடு, அனிருத் என்றாலே இசை அப்படி இருக்கும் என்று பெயர் சொல்லக் கூடிய வகையில் மிகச்சிறந்த பெயரை தமிழ் மொழி மட்டுமல்லாமல் தெலுங்கு, ஹிந்தி என அனைத்து மொழிகளிலும் பெற்றுவிட்டார். 

இதனை அடுத்து தற்போது ஹிந்தி, தெலுங்கு, தமிழ் போன்ற மொழிகளில் பிஸியாக இசை அமைத்து வரக்கூடிய இவர் இந்த ஆண்டில் மூன்று வெற்றி படங்களை தந்திருக்கிறார். அது ஜவான், ஜெய்லர் மற்றும் லியோ. இவர் இசை அமைப்பாளர் என்பதை விட மிகச் சிறந்த பின்னணி பாடகராகவும் திகழ்கிறார். 

அனிருத் இசையில் வரும் 2024 ஆம் ஆண்டில் 12 படங்கள் வெளி வருவதாக தெரியவந்துள்ளது. இதனை அடுத்து எதிர்வரும் 2024 இசையமைப்பாளர் அனிருத்தின் ஆண்டாகவே மாறிவிட்டதா? என்று பலரும் கேள்விகளை முன் வைத்து இருக்கிறார்கள். 

குறிப்பாக 2024 ஆம் ஆண்டில் வெளியாக இருக்கும் சூப்பர் ஸ்டாரின் வேட்டையன் மற்றும் 171 வது படத்திற்கு அனிருத் தான் இசை அமைக்கிறார். அது போலவே உலகநாயகனின் இந்தியன் 2, இவர் தான் இசையமைத்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. 

மேலும் இவர் தல அஜித்தின் விடாமுயற்சி, சிவகார்த்திகேயனின் 23ஆவது படம், பிரதீப் ரங்க நாதனின் நடிப்பில் உருவாக இருக்கும் எல்ஐசி படத்திற்கான இசையையும் அமைக்கிறார். அதுமட்டுமா? நெல்சன் திலீப் குமார் தயாரிக்க அவரது உதவியாளர் எடுக்கும் படத்திற்கான இசையையும் அனிருத் தான் போடுகிறார். 

இது கவின் நான்காவது திரைப்படம் என்பது குறிப்பிடத்தக்கது. தெலுங்கில் ஜூனியர் என்டிஆர் உடன் தேவாரா படத்திலும், தமிழில் அன்பு மற்றும் அறிவு இயக்கம் புதிய படம், விஜய தேவர கொண்டாவின் 12 ஆவது படம், அல்லு அர்ஜுனனின் அடுத்த படம், ஆகாஷ் அதர்வாவின் மற்றொரு படம் என 2024-ம் ஆண்டு முழுவதுமே அனிருத்தின் படங்கள் மட்டுமே என்று சொன்னால் மிகையாகாது. 

இவர் இசையமைக்கும் அத்தனை படங்களும் வெற்றி பெற இவரது ரசிகர்கள் அனைவரும் இப்போது இருந்தே அவரை வாழ்த்தி வருவதோடு மட்டுமல்லாமல் பாராட்டுக்களையும் குவித்து வருகிறார்கள்.