சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை விரும்பக்கூடிய முன்னணி நடிகராக திகழ்ந்தவர் நடிகர் சிவகார்த்திகேயன், இவரை தற்போது அனைவரும் அன்போடு எஸ்கே என்று அழைத்து வருகிறார்கள்.
இவர் மாவீரன் படத்தை அடுத்து இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி உடன் கூட்டணி அமைத்து உலக நாயகன் கமலஹாசன் தயாரிக்கும் படத்தில் நடித்து வருகிறார்.
இந்த நிலையில் தற்போது இந்த படம் குறித்து ஒரு முக்கிய தகவல் வெளிவந்துள்ளது. அதன்படி எஸ்கே 21 படத்தின் பட்ஜெட் போட்டதை விட 25 கோடி அளவு அதிகரித்து பட்ஜெட்டில் துண்டு விழுந்து விட்டது.
இந்த சூழ்நிலையில் பணத்தை சரி கட்ட சிவகார்த்திகேயன் சம்பளத்தில் இருந்து பிடித்தம் செய்து விடலாம் என்று உலகநாயகன் கமலஹாசன் முடிவு எடுத்து இருக்கிறார்.
இதற்கிடையில் சிவகார்த்திகேயன் மற்றும் இசையமைப்பாளர் இமான் பிரச்சனை பெறும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ள நிலையில் எஸ்கே 21 படத்திற்கு கமலஹாசன் பட்ஜெட் விஷயத்தில் இப்போது சிவகார்த்திகேயன் தலையில் கை வைத்து விட்டதாக செய்திகள் பரவி சிவகார்த்திகேயனுக்கு இது சோதனை காலம் இயன்ற பேச்சுக்களை ஏற்படுத்தி விட்டது.
இதைத்தான் பட்ட காலில் படும் என்று சொன்னார்கள் என்று ரசிகர்கள் பலரும் சிவகார்த்திகேயன் இனி எப்படி இதிலிருந்து மீளுவார் என்பது போல அவர்களுக்குள் பட்டிமன்றம் வைத்து பேசி வருகிறார்கள்.
இந்தப் பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் நீங்கள் மறக்காமல் வண்ணத்திரை பக்கத்திற்கு ஆதரவு கொடுத்து உங்கள் நண்பர்களுக்கும் ஷேர் செய்யுங்கள்.