கே ஜி எஃப் திரைப்படமானது 2018 ஆம் ஆண்டு வெளிவந்து பட்டி, தொட்டி எங்கும் பிரபலமான படமாக மாறியது. இந்த படத்தில் நடித்த யாஷ் மக்கள் மத்தியில் செல்வாக்கு மிக்க பிரபலமான நடிகர்களில் ஒருவராக மாறினார்.
இதனை அடுத்து மக்கள் மத்தியில் சிறந்த வரவேற்பு இந்த படத்துக்கு கிடைத்ததின் காரணத்தால் இந்த படத்தின் இரண்டாம் பாகம் பிரம்மாண்டமான முறையில் உருவாகி கடந்த ஆண்டு வெளி வந்து முதல் பாகத்துக்கு கிடைத்த அதே வெற்றியும், ஆதரவும் கிடைத்தது.
இந்நிலையில் இரண்டாம் பாகம் சுமார் 100 கோடிக்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்ததை அடுத்து, இந்த படத்தின் மூன்றாவது பாகம் வெளிவருமா? என்று ரசிகர்கள் ஆவலோடு காத்திருந்தார்கள்.
அவர்களின் ஆவலை பூர்த்தி செய்யும் விதமாக தற்போது கேஜிஎப் மூன்றாம் பாகம் பற்றிய முக்கிய அறிவிப்பை பட குழு அதிகாரபூர்வமாக அறிவித்துவிட்டது. மேலும் இந்த படத்தை பற்றி படத்தின் பிரபல இயக்குனர் பிரசாந்த் நீல் பேசி இருக்கிறார்.
அவர் தனது கருத்தை கூறும் போது கேஜிஎப் படத்தின் மூன்றாம் பாகம் வருவது உறுதி என்று கூறியதோடு இந்த படத்திற்கான கதை ஏற்கனவே தயாரான நிலையில் இருப்பதால் சரியான வாய்ப்பு கிடைக்கக்கூடிய சமயத்தில் அவரே படத்தை இயக்க உள்ளதாகவும் தெரிவித்தார்.
அதுமட்டுமல்லாமல் தற்போது சலார் பட பணிகளில் முழுமையாக தன்னை அர்ப்பணித்து விட்டதின் காரணமாக அதில் பிசியாக இருப்பதாகவும், அந்த பணிகள் முடிந்து விட்டால் மீண்டும் கேஜிஎப் 3 படத்திற்கான பணிகளில் ஈடுபடுவேன் என குறிப்பிட்டு இருக்கிறார்.
அத்தோடு இந்த படத்தில் மீண்டும் யாஷ் தான் ஹீரோவாக நடிப்பார். அவரோடு இணைந்து பணியாற்ற தான் காத்திருப்பதாக கூறி ரசிகர்களின் மத்தியில் ஒரு மிகப்பெரிய மகிழ்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறார்.
தற்போது ரசிகர்களும் இந்த படம் எப்போது வரும் அதை எப்போது திரையரங்குகளில் பார்க்கலாம் என்ற எதிர்பார்ப்பில் காத்திருக்கிறார்கள்.