கலக்கப்போவது யாரு என்ற நிகழ்ச்சியின் மூலம் விஜய் டிவிக்குள் நுழைந்து ஒட்டுமொத்த தமிழ் மக்களையும் தனது காமெடி திறனால் கட்டி வைத்து சிரிக்க வைத்தவர் அறந்தாங்கி நிஷா.
இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிய பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு நாள் ஒன்றுக்கு இரண்டு லட்சம் ரூபாய் சம்பளமாக வாங்கி இருக்கிறார்.
இதனை அடுத்து இவருக்கு திரைப்படங்களில் நடிக்கக்கூடிய வாய்ப்புகள் கிடைத்தது.
படங்களில் நடித்துக் கொண்டு வரும் நிஷா தற்போது சென்னையில் ஏற்பட்ட மிக்ஜாம் புயலின் பாதிப்பை உணர்ந்து கொண்டு நேரடியாக மக்களுக்கு உதவ களம் இறங்கி இருக்கிறார்.
அதுவும் எப்படிப்பட்ட நிலையில் என்று தெரிந்தால் நீங்கள் அவரை கண்டிப்பாக பாராட்டாமல் இருக்க மாட்டீர்கள்.
இவரது மகளின் உடல்நிலை சரியில்லாத காரணத்தால் அவருக்கு டைபாய்டு ஏற்பட்டு இருந்த நிலையில் ஐ சி யூ வில் அட்மிட் செய்து விட்டு இந்த களப்பணியை எந்த ஒரு கலக்கமும் இல்லாமல் செய்திருக்கிறார்.
குறிப்பாக இவர் சென்னையில் தாழ்வாக இருக்கக்கூடிய பகுதிகளில் நீர் புகுந்து மக்கள் உயிருக்கு அச்சம் விளைவிக்கக்கூடிய நிலையில் இருந்த பகுதிகளுக்கு நேரடியாக சென்று அனைத்து உதவிகளையும் செய்து இருக்கிறார்.
இவர் புயலால் வாழ்வாதாரத்தை இழந்து தவித்த மக்களுக்கு உணவை கொடுத்து உதவி செய்தார். அது மட்டும் அல்லாமல் உணவோடு தண்ணீர் பாட்டில்கள் மற்றும் தேவையான பொருட்களை கொடுத்து உதவி செய்திருக்கிறார்.
இவரது இந்த செயலை பலரும் வெகுவாக பாராட்டி இருக்கிறார்கள்.
எனது மகள் மருத்துவமனையில் இருக்கக்கூடிய சூழ்நிலையிலும் மகளை விட்டு விட்டு மக்களுக்காக இடைவிடாமல் உதவி செய்த இவரை அனைவரும் பாராட்டு இருக்கிறார்கள்.
இந்த செய்தி தற்போது வைரலாக இணையத்தில் வலம் வருகிறது.
உங்களுக்கும் இந்த பதிவு பிடித்திருந்தால் மறக்காமல் வண்ணத்திரை பக்கத்திற்கு லைக் செய்து உங்களது ஆதரவை எங்களுக்கு கொடுங்கள்.