சின்னத்திரையில் தொகுப்பாளினியாக அறிமுகம் ஆகி வெள்ளித்திரையில் நடிக்கும் நடிகைகளுக்கு இணையாக ரசிகர்கள் பட்டாளத்தை வைத்திருப்பவர் தான் டிடி என்கிற திவ்யதர்ஷினி.
இவர் சின்னத்திரையில் நடக்கும் நிகழ்வுகளை தொகுத்து வழங்குவதோடு மட்டுமல்லாமல் திரைப்பட விழாக்கள், விருது வழங்கும் விழாக்கள் என பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி ரசிகர்களின் மத்தியில் பெறுத்த ஆதரவை பெற்றதோடு நடிகர் மற்றும் நடிகைகள் விரும்பும் தொகுப்பாளினிகளின் வரிசையில் முதல் இடத்தில் இருக்கிறார்.
அண்மையில் இவர் காலில் அறுவை சிகிச்சை செய்து கொண்டதன் காரணத்தால் அதிக நேரம் நின்று நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்க முடியாது என்பதால் தற்போது அமர்ந்து கொண்டு தான் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்குகிறார்.
இவர் சின்னத்திரையில் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்குவதோடு நின்று விடாமல் திரைப்படங்களிலும் சின்ன, சின்ன வேடங்களை ஏற்று நடித்து தன் நடிப்பால் அனைவரையும் கவர்ந்தவர்.
இந்நிலையில் இவர் சூப்பர் சிங்கர் மேடையில் இருந்தபோது பிரபல பாடகர் பிரதீப் "தலைக்கோதும் இளங்காத்து சேதிக் கொண்டு வரும்" என்ற பாடலை பாட துவங்கியதுமே டிடி மிகவும் எமோஷனல் ஆனதுடன் பாடலை கேட்கும் போதே அவர் கண்ணீர் விட்டு அழுத வீடியோ ஒன்று தற்போது இணையதளத்தில் வலம் வருகிறது.
இந்த வீடியோவை பலரும் பார்த்து மெய் மறந்து போனதோடு டிடி ஏன் இப்படி எமோஷனலாக அழுகிறார் என்ற கேள்வியை முன்வைத்து இருக்கிறார்கள்.
இதற்கு உரிய விடையை கட்டாயம் டிடி ரசிகர்களுக்கு இனி வரும் நாட்களில் கூறுவார் என்று ஆவலோடு அனைத்து ரசிகர்களும் காத்திருக்கிறார்கள்.
உங்களுக்கும் இந்த பதிவு பிடித்திருந்தால் மறக்காமல் வண்ணத்திரை பக்கத்திற்கு லைக் செய்து உங்களது ஆதரவை எங்களுக்கு கொடுங்கள்.