“கல்யாணத்துக்கு முன்பே காதலன் போட்ட அந்த கண்டிஷன்..!” - ஒத்து வராதுனு BREAKUP செய்த பாண்டியன் ஸ்டோர்ஸ் லாவண்யா..!

 

சின்னத்திரையில் சீரியல் நடிகையாக பாண்டியன் ஸ்டோர் தொடரில் நடித்த நடிகை லாவண்யா முல்லை என்ற கதாபாத்திரத்தை ஏற்று நடித்து இல்லத்தரசிகளின் மத்தியில் நல்ல பெயரை பெற்று விட்டார்.

நடிகை லாவண்யா ஆரம்ப நாட்களில் மாடல் அழகியாக இருந்தவர். இதனை அடுத்து சீரியல் நடிகையாக மாறினார். மேலும் இவர் அண்மையில் கொடுத்த பேட்டி ஒன்றில் தனக்கு இரண்டு, மூன்று முறை அட்ஜஸ்ட்மென்ட் நடந்துள்ளதாக வெளிப்படையாக கூறினார். 

இவர் நடிப்பு துறைக்கு வருவதற்கு முன்பு டியூஷன் டீச்சர் ஆகவும், வங்கியில் வேலை செய்ததாகவும் கருத்தை பகிர்ந்த இவர் தற்போது தன் காதலனுடன் பிரேக் அப் நடந்தது குறித்தும் கூறி இருக்கிறார். 

அந்த வகையில் இரண்டு வருடங்களுக்கு முன்பு இவர் வங்கியில் வேலை செய்தபோது ஒருவருடன் ரிலேஷன்ஷிப்பில் இருந்திருக்கிறார். பொதுவாகவே பசங்க அனைவருமே பெண்களைப் பிடித்திருந்தால் அவர்கள் எப்படி இருக்கிறார்களோ அப்படியே ஏற்றுக் கொள்வதை தான் நான் பார்த்திருக்கிறேன். 

தனக்கு வாய்த்த காதலன் என்னிடம் பல கண்டிஷன்களை போட்டு அப்படி இரு, இப்படி இரு என்று பலமுறை கண்டிஷன் போட்டு பேசி இருக்கிறார். வங்கியில் வேலை பார்த்த போது நான் என்ன செய்தாலும் சரி என்று தலையாட்டியவர் மாடலின் துறைக்குச் சென்றது பிடிக்கவில்லை. 

நான் என் வாழ்க்கையில் அடுத்த கட்டத்திற்கு போக அந்த நபர் விரும்பவில்லை. எனக்கு தடையாக இருக்கிறார் என என் மனதில் பட்டதை அடுத்து நான் அந்த நபரை பிரேக்கப் செய்து விட்டதாக லாவண்யா கருத்துக்களை கூறி பலரையும் சிந்திக்க வைத்து விட்டார். 

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் மறக்காமல் வண்ணத்திரை பக்கத்தை லைக் செய்து உங்களது நண்பர்களுக்கும் ஷேர் செய்யுங்கள்