“இவங்களை மனசுல வச்சு எழுதின கேரக்டர் நீலாம்பரி.!” - டாப் சீக்ரெட்டை உடைத்த கே எஸ் ரவிக்குமார்..!

 

திரை உலகில் நீண்ட நாட்கள் கழித்து படையப்பா படத்தில் ரம்யா கிருஷ்ணன் கதாபாத்திரத்தில் நடித்த நீலாம்பரி கேரக்டரை பற்றிய ஒரு டாப் சீக்ரெட்டை இயக்குனர் கே எஸ் ரவிக்குமார் தற்போது கூறுகிறார். 

அதுவும் இந்த கேரக்டரை இவர் அந்த இரும்பு பெண்மணியை மனதில் வைத்து உருவாகியதாக கூறி இருப்பது ரசிகர்களின் மத்தியில் பெருத்த ஆச்சிரியத்தை ஏற்படுத்தி உள்ளது. அந்த இரும்பு பெண்மணி யார் என்று நீங்கள் யோசிக்கலாம். 

அவர் வேறு யாரும் இல்லை தமிழகத்தின் முன்னாள் முதல்வர் ஜெ ஜெயலலிதாவை மனதில் வைத்துத்தான் அந்த கேரக்டரை எழுதி இருக்கிறார். இந்த கருத்தை அவர் தற்போது ரஜினிகாந்த் மற்றும் மீனா நடிப்பில் 1995 ஆம் ஆண்டு வெளி வந்த மிகப்பெரிய ஹிட் படமான முத்து திரைப்படம் புது பொலிவுடன் வருகின்ற டிசம்பர் 8 தேதி ரீ ரிலீஸ் செய்ய உள்ள நிலையில் பத்திரிக்கையாளர்கள் இடையே நடந்த சந்திப்பின் போது கூறினார். 

அது மட்டுமல்லாமல் இந்த முத்து திரைப்படமானது தமிழ்நாட்டில் மட்டுமல்லாமல் ஜப்பான் நாட்டிலும் வசூலை வாரி குவித்தது. கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக இந்த சாதனையை எந்த படமும் முறியடிக்காத நிலையில், கடந்த ஆண்டு வெளிவந்த ஆர் ஆர் ஆர் திரைப்படம் ஜப்பானில் ரிலீசானதை அடுத்து அந்த சாதனை முறியடிக்கப்பட்டது. 

மேலும் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பில் இவர் படையப்பா படத்தில் இடம் பெற்ற நீலாம்பரி கேரக்டரை பற்றி எப்போதும் இல்லாத அளவு எந்த முறை அவராகவே முன் வந்து பேசியதால் இந்த பேச்சு தற்போது இணையத்தில் வைரலாக மாறிவிட்டது. 

இன்று வரை எவராலும் மறக்க முடியாத கேரக்டராக நீலாம்பரி கேரக்டர் உள்ளது. அவரை உருவாக்க ஜெயலலிதா ஒரு இன்ஸ்பிரேஷன் ஆக அமைந்தது தான் அந்தக் கேரக்டர் இன்னும் மக்கள் மத்தியில் பேசும் பொருளாக உள்ளது என கூறலாம். 

இந்த பதிவு உங்களுக்குப் பிடித்திருந்தால் மறக்காமல் வண்ணத்திரை பக்கத்திற்கு லைக்குகளை அள்ளித் தந்து உங்கள் ஆதரவை தாருங்கள்.