அழகூரில் பிறந்தவளே.. அழகாளே என்னை சாய்த்தவளே.. என்ற பாடல் வரிகள் கல்யாணி பிரியதர்ஷனுக்கு ஏற்புடையதாக இருக்கும். இவரின் தந்தை மலையாள திரையுலகில் முன்னணி இயக்குனராக இருந்தவர்.
கல்யாணி பிரியதர்ஷினி பொருத்தவரை தெலுங்கில் வெளி வந்த ஹலோ என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகம் ஆனவர். இதனை அடுத்து முதல் படத்திலேயே தனது அபார நடிப்புத் திறனை பார்த்து தெலுங்கில் ஏராளமான ரசிகைகள் பட்டாளத்தை பெற்று விட்டார்.
இதனை அடுத்து இவருக்கு தமிழில் நடிக்கக்கூடிய வாய்ப்பு வந்து சேர்ந்தது. அந்த வகையில் முன்னணி கதாநாயகனாக இருக்கும் சிவகார்த்திகேயன் உடன் இணைந்து ஹீரோ என்ற திரைப்படத்தில் நடித்து தமிழ் திரையுலகுக்கு என்ட்ரி கொடுத்தார்.
இவரது அற்புதமான நடிப்புத் திறனை பார்த்து இவருக்கு தமிழ், தெலுங்கு, மலையாளம் என தென்னிந்திய மொழிகளில் நடிக்க கூடிய வாய்ப்புகள் வந்து சேர்ந்தது. அந்த வகையில் அண்மையில் வெளிவந்த திரைப்படம் ஆண்டனி.
இந்தப் படத்தில் இவர் ஒரு மார்ஷியல் ஆர்ட்ஸ் கற்ற இளம் கல்லூரி மாணவியாக நடித்திருந்தார்.
இந்தக் கதாபாத்திரத்தில் இவர் நடித்த போது நிறைய அடி, உதை காயங்கள் என ஏற்பட்டதாக வெளிப்படையாக தெரிவித்தார்.
இவர் படம் வெளி வந்த பின்பு அதனை துயரங்களும் மறைந்து புன்னகை ஏற்பட்டதாகவும் கூறியிருக்கிறார்.
அது மட்டுமல்லாமல் படத்தில் நடிக்கும் போது கண்ணீர் விட்டது உண்மையானது. இதற்காக கிளிசரின் ஏதும் பயன்படுத்தவில்லை என பேசி இருக்கிறார்.
அதுமட்டுமல்லாமல் யாராக இருந்தாலும் தன்னை ஒரு வசதியான வட்டத்திற்குள் வைத்துக் கொள்வது அவர்களுக்கு உரிய வளர்ச்சியை எப்போதும் தராது என்பதை தாமதமாக உணர்ந்ததாக கூறியிருக்கிறார்.
இந்த படத்தைப் பார்த்து சண்டை காட்சிகளில் ரசிகர்கள் ஆரவாரமாக கைதட்டல்களை தந்து என்னை உற்சாகப்படுத்துகிறார்கள். இந்த நிகழ்வு எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியது என கல்யாணி பிரியதர்ஷன் கூறியது பேசும் பொருளாக இணையத்தில் பேசப்படுகிறது.
இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் மறக்காமல் வண்ணத்திரை பக்கத்திற்கு, உங்கள் மேலான ஆதரவை கொடுத்து உங்கள் நண்பர்களுக்கும் ஷேர் செய்யுங்கள்.