திரை உலகில் ஏறத்தாழ 20 ஆண்டுகளுக்கும் மேலாக தனக்கு என்று ஒரு தனி இடத்தை பிடித்து அசத்தி வரும் நடிகை திரிஷா தற்போது பல முன்னணி நடிகர்களோடு நடித்து வருகிறார். இவர் தனது இரண்டாவது இன்னிங்ஸை பொன்னியின் செல்வன் பகுதி 1 மற்றும் 2 ஆரம்பித்தார்.
வரலாற்று காவியமான பொன்னியின் செல்வன் படத்தில் இவர் குந்தவை கதாபாத்திரத்தை ஏற்று நடித்து ரசிகர்களின் மனதில் இடம் பிடித்ததோடு என்றுமே இளமை குன்றாத நடிகையாக இருக்கிறார் என்ற பெயரையும் பெற்று விட்டார்.
ஏற்கனவே இவர் நடிப்பில் வெளிவந்த மௌனம் பேசியதே, கில்லி, சாமி, திருப்பாச்சி, ஆறு, குருவி விண்ணைத்தாண்டி வருவாயா போன்ற படங்கள் மூலம் பல்லாயிரக்கணக்கான ரசிகர்களை பெற்றவர்.
இதனை அடுத்து அண்மையில் இவர் நடிப்பில் வெளிவந்த லியோ திரைப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக மீண்டும் இணைந்து ரசிகர்களின் மனதில் நிரந்தரமான இடத்தை பிடித்துக் கொண்டார். இதனை அடுத்து தற்போது தல அஜித் நடிக்கும் விடாமுயற்சி படத்திலும் கதாநாயகியாக நடித்து வருகிறார்.
இந்நிலையில் சமூக வலைதளத்தில் தற்போது இவர் வெளியிட்டிருக்கும் லேட்டஸ்ட் வெள்ளை நிற புடவையைப் பார்த்து ரசிகர்கள் அதிக லைக்குகளை போட்டிருக்கிறார்கள். புடவை கட்டில் எங்களை சாய்த்து விட்டால் என்று கமாண்டிகளையும் தந்திருக்கிறார்கள்.
பார்ப்பதற்கு தேவதையைப் போல காட்சி அளித்திருக்கும் இந்த புகைப்படங்கள் ஒவ்வொன்றும் ரசிகர்களின் மனதை ஆளப் பதிந்து விட்டதோடு, திரும்பத் திரும்ப இணையத்தில் பார்க்கும் இணையில்லாத புகைப்படமாக மாறிவிட்டது.
நீங்களும் ஒரு முறை இந்த புகைப்படத்தை பார்த்தால் கட்டாயம் வைத்த கண் எடுக்காமல் பார்ப்பீர்கள். அந்த அளவு கூடுதல் அழகோடு இருப்பதாக ரசிகர்கள் அனைவரும் கூறியிருக்கிறார்கள்.
இன்னும் சில ரசிகர்கள் 40 வயதை தொட்டுவிட்டார் என்று சொன்னால் நிச்சயமாக நம்ப முடியாது. எப்படி இப்படி நீங்கள் உங்கள் உடலையும் அழகையும் மெயின்டைன் செய்கிறீர்கள் என்ற கேள்விகளை முன் வைத்து இருக்கிறார்கள்.