இது மாதிரி பசங்கள பிடிக்கும்..!! அதை செஞ்சா இன்னும் குஷி..! சாய் பல்லவி ஓப்பன் டாக்…!

 

தென்னிந்திய மொழிகளில் நடித்து அதிக அளவு ரசிகர்களால் ரசிக்கப்படக்கூடிய நடிகைகளில் ஒருவராக திகழ்ந்தவர் தான் சாய் பல்லவி. இவர் ஆரம்ப நாட்களில் மலையாள திரைப்படத்தில் வெளி வந்த பிரேமம் என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகம் செய்யப்பட்டு ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார். 

இவரை ரசிகர்கள் எல்லோரும் மாடர்ன் நதியா என்று அழைக்க கூடிய வகையில் கவர்ச்சிக்கு முக்கியத்துவம் கொடுக்காமல், ஹோம்லி அப்பியரன்சில் உடைகளை உடுத்தி நடிப்பதில் வல்லவர். மிகச் சிறப்பாக நடனம் ஆடக்கூடிய நாயகிகளின் வரிசையில் இவரும் ஒருவர். 

இவர் நடிப்பில் கடைசியாக வெளி வந்த கார்கி திரைப்படம் ரசிகர்களின் மத்தியில் நல்ல வரவேற்பை தந்ததோடு வெற்றியும் கொடுத்தது. நல்ல தமிழ் பேசத் தெரிந்த தமிழ் நடிகையான சாய் பல்லவி தன்னுடைய வருங்கால கணவர் எப்படி இருக்க வேண்டும் என்பது பற்றி அண்மையில் பேசியிருக்கும் தகவல்களை ரசிகர்கள் சுவாரஸ்யமாக கேட்டிருக்கிறார்கள். 

இதில் இவருக்கு டார்க் ஸ்கின் பசங்களை மிகவும் பிடிக்கும் என்று கூறி இருப்பதோடு, சென்சிட்டிவான பசங்கனா மேலும் பிடிக்கும் என கூறி இருக்கிறார். பசங்க யாரும் எதற்கும் அழக்கூடாது என்றார். 

மேலும் எமோஷனலான அழகான பையனை தனக்கு பிடிக்கும். குறிப்பாக சமையல் தெரிந்த பசங்க அப்படின்னா சொல்லவே வேண்டாம் என கூறியிருக்கிறார். இதற்கு காரணம் அவருக்கு சமைக்க தெரியாதாம். சாய் பல்லவி தற்போது பகிர்ந்த இந்த விஷயம் தான் சமூக வலைத்தளங்களில் ரசிகர்களின் மத்தியில் வைரலாக பரவி வருகிறது. 

இதை அடுத்து சாய் பல்லவிக்கு டாஸ்கி ஸ்கின் பசங்க அதிகளவு புரபோஸ் செய்ய திட்டமிட்டு இருப்பதாக வதந்திகள் கசிந்து உள்ளது.