பாம்பே நடிகையோடு மீண்டும் ஜல்சா பண்ணும் வாரிசு நடிகர்..! - பெரியவரு வீட்டில் புகைச்சல்..!

 


தீபாவளிக்கு வெளிவந்த தனது 25 வது படத்தின் வெளியீட்டு விழாவிற்கு வருகை தந்திருந்த அந்த பாம்பே நடிகையோடு மீண்டும் ஜல்சா பண்ணும் வாரிசு நடிகர். இதனை அடுத்து எப்போதும் பண்பாடு, கலாச்சாரம் என்று பேசி வரும் பெரியவர் வீட்டில் தற்போது கடுமையான புகைச்சல் ஏற்பட்டுள்ளதாக கோலிவுட்டில் கிசுகிசுக்கள் எழுந்துள்ளது. 

ஆரம்ப நாட்களில் ஏற்கனவே தன் வீட்டில் இரண்டு நடிகர்கள் இருப்பதின் காரணமாக இயக்குனர் ஆகி விட வேண்டும் என்ற ஆசையில் இருந்து வந்த இந்த நடிகர், உதவி இயக்குனராக சில ஆண்டுகள் பணியாற்று இருக்கிறார். 

எனினும் இவர் திடீரென்று நடிகராக மாற, இவரின் முதல் படமே மெகா ஹிட் திரைப்படமாக அமைந்து ரசிகர்களின் மத்தியில் பேசப்படும் நாயகனாக மாறியதை அடுத்து பல பட வாய்ப்புகள் வந்து சேர்ந்தது. 

அந்த வகையில் தொடர்ந்து நான்கு படங்களில் சூப்பர் டூப்பர் வெற்றியை கொடுத்த இவர் மூன்றாவது படத்தை நடிக்கும் போது இவருக்கு ஜோடியாக அந்த பாம்பே நடிகை நடித்திருக்கிறார். இவர்கள் படத்தில் மட்டுமல்லாமல் இருவருக்குள்ளும் கெமிஸ்ட்ரி வேலை செய்ய ஆரம்பித்ததின் காரணத்தால் இருவரும் ஒருவரை ஒருவர் விரும்பியிருக்கிறார்கள். 

ஆனால் வீட்டில் பெரியவர் காராராக ஏற்கனவே ஒருவர் காதல் திருமணம் செய்த நிலையில் நீ அந்த வழியில் போகக்கூடாது என்று ஸ்ட்ரிக்ட் ஆக கூறி கட்டுப்பாடுகளை விதித்து விட்டார். 

எனவே வேறு வழியில்லாமல் தன் காதலை மறந்து விட்ட அந்த நடிகர் பெரியவரின் வற்புறுத்துதல் காரணமாக தன் வகுப்பை சேர்ந்த பெண்ணையே பெற்றோர்களுக்காக திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்குப் பிறகு கப்சிப்பென ஒதுங்கி இருந்த இந்த நடிகர் தற்போது மீண்டும் அந்த பாம்பே நடிகையோடு கடலை போட ஆரம்பித்து விட்டார். 

மேலும் இவர் நடித்த பட விழாவிற்கு எப்படி அந்த பாம்பே நடிகை வந்தார் என்பது இன்று வரை தெரியவில்லை. நடிகர் அழைக்காமல் வந்திருப்பாரா? என்ற பேச்சுக்கள் எழுந்துள்ள நிலையில் அந்த நடிகை மேடையில் இந்த நடிகரை வெகுவாக புகழ்ந்து பேசி பழைய நினைவுகளுக்கு அழைத்துச் சென்று விட்டாராம். 

இதனை அடுத்து இருவரும் அடிக்கடி சந்தித்துக் கொள்வதாக பேச்சுக்கள் எழுந்துள்ள நிலையில், இன்னும் அந்த நடிகையோடு நடிகர் தொடர்பில் தொடர்பில் இருக்கிறாரா? என்ற கேள்வியை எழுப்பி உள்ளதோடு குடும்பத்தாரின் உச்சகட்ட கோபத்திற்கும் ஆளாகி விட்டார். 

அதுமட்டுமல்லாமல் நடிகையோடு அடிக்கடி தொலைபேசியில் பேசுவதால் வீட்டில் இருக்கும் பெரியவர் கடுமையான கோபத்தில் இருப்பதோடு கட்டப்பஞ்சாயத்திலும் ஈடுபட்டு வருகிறார்.