“சின்ன வயசுல அது நடந்திடுச்சு.! “ - வீட்டுக்கு போய் அழுதேன் கீர்த்தி பாண்டியன் வெளிப்படை..!

 

தமிழ் திரையுலகில் தற்போது வளர்ந்து வரும் பிரபல நடிகர்களில் ஒருவராக மாறி இருப்பவர் அசோக் செல்வன். இவர் சில மாதங்களுக்கு முன்பு நடிகர் அருண் பாண்டியனின் மகளான கீர்த்தி பாண்டியனை காதலித்து திருமணம் செய்து கொண்டார். 

இவரது திருமண நிகழ்வுக்கு பல பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் கலந்து கொண்டதோடு வாழ்த்துக்களை தெரிவித்து இருக்கிறார்கள். இந்நிலையில் கீர்த்தி பாண்டியன் அழகாக இல்லை என்று அவரது உருவத்தை வைத்து உருவ கேலி செய்து வந்திருக்கிறார்கள். 

கீர்த்தி பாண்டியனை இன்னும் உருவ கேலி செய்து வரக்கூடிய சூழ்நிலையில் அண்மையில் இவர் கலந்து கொண்ட பேட்டியில் உங்களுக்கு வரும் மோசமான கமாண்டுகளை பற்றி நீங்கள் எப்படி நினைக்கிறீர்கள் என்ற கேள்வியை எழுப்பி இருக்கிறார்கள். 

இந்தக் கேள்விக்கு பதில் அளித்த கீர்த்தி பாண்டியன் சிறுவயதிலிருந்தே இது போன்ற கேலிகளுக்கும், கிண்டல்களுக்கும் ஆளாகி இருப்பதாகக் கூறியிருக்கிறார். மேலும் இவர் நீண்ட காலமாக குள்ளமாகவும், ஒல்லியாகவும், கருப்பாகவும் இருந்ததின் காரணத்தால் தன்னை அனைவரும் கிண்டல் செய்து இருக்கிறார்கள் எனக் கூறினார். 

மேலும் சிறுமியாக இருக்கும் போது அதிக அளவில் வெயிலில் சுற்றி திரிவாராம். அதன் காரணத்தால் மேனி கருப்பு நிறமாக மாறிவிட்டது என்று கூறியதோடு இது போல கிண்டல் செய்து என்னை பேசுபவர்களை நினைத்து வீட்டுக்கு சென்று தனியாக அமர்ந்து அழுவாராம். 

ஆனால் அந்த சிறு வயது நினைவுகளை தற்போது யோசித்துப் பார்த்தால் அது தனக்கு பெரிதாக தெரியவில்லை எனவும், அது கடந்த காலத்திற்கு தன்னை அழைத்துச் சென்றுள்ளதாகவும் கூறி இருக்கிறார். 

இது போன்ற உருவ கேலிகளை நினைத்து வருந்தி இருந்தால் இந்த அளவிற்கு திரை உலகிற்கு அறிமுகமாகி வளர்ந்திட முடியாது. எனவே எவரும் உருவ கேலிகளை நினைத்து வருந்த வேண்டியதில்லை என தெரிவித்திருக்கிறார்.