நாகரிகம் எவ்வளவு வளர்ந்திருந்தாலும் பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள் ஆங்காங்கே நிகழ்ந்த வண்ணம் தான் உள்ளது. எந்த துறையில் பெண்கள் இல்லை என்று கேட்கும் அளவுக்கு அவர்களின் வளர்ச்சி உச்சத்தை தொட்டிருந்த போதும் எல்லா துறைகளிலுமே பெண்களுக்கு எதிரான பாலியல் தொல்லைகள் நடப்பது சகஜமாகிவிட்டது.
அதிலும் சினிமா துறை என்றால் கேட்கவா வேண்டும். நாளொரு மேனியும் பொழுது ஒரு வண்ணம் போல பெண்களுக்கு எதிராக பாலியல் சீண்டல்கள் அதிகரித்து வருவதால் கடுமையான மன உளைச்சலுக்கு ஆளாவதோடு அவற்றில் இருந்து மீண்டு வந்து வெற்றி காண்பது என்பது குதிரைக்கொம்பாகவே உள்ளது.
தற்போது தமிழ் சினிமாவின் பாடல் ஆசிரியராக திகழ்ந்து வரும் வைரமுத்துவின் மீது சில ஆண்டுகளுக்கு முன்பாகவே பின்னணி பாடகி சின்மயி தன்னிடம் அவர் தவறாக நடந்து கொள்ள முயற்சி செய்தார் என்று மீ டூ புகார் அளித்தது ஒரு மிகப்பெரிய அதிர்வை ஏற்படுத்தியது.
அதுமட்டுமல்லாமல் அந்த குற்றச்சாட்டை மறுத்து வந்த வைரமுத்துவை பற்றி தற்போது பிரபல பாடகியான புவனா சேஷன் சில முக்கிய தகவல்களை பகிர்ந்திருக்கிறார். இந்த தகவல்கள் அனைத்தும் இணையத்தில் வைரலாகி வருகிறது.
இதற்கு காரணம் பாடகி கூறிய விஷயம் தான்.
வைரமுத்து ஒருவருக்கு வாய்ப்பு கொடுக்கும்போதே அவரது ஆசைக்கு அடிபணிந்து நடக்க வேண்டும் என்ற கண்டிஷனை போடக்கூடிய நபர். மேலும் அது மாதிரி நடக்க மாட்டோம் என்று கூறினாலோ, அந்தப் பாடலை பாடாமல் வெளியே சென்று விடலாம் என்று வெளியேறினாலோ அதன் பின் சினிமாவில் எங்கேயும் பாட முடியாத அளவிற்கு பழிவாங்கக்கூடிய மிருககுணம் கொண்டவர் என்று புவனாசேஷன் கூறியிருக்கிறார்.
இந்த கருத்து தான் தற்போது ரசிகர்களின் மத்தியில் பேசும் பொருளாக மாறிவிட்டது. அத்தோடு தமிழ் மேல் பற்று கொண்ட இவருக்கு பெண்களுக்கு உரிய மரியாதையை கொடுக்க வேண்டும் என்பது தெரியாதா? என்று பலரும் பல விதத்தில் விமர்சனம் செய்து வருகிறார்கள்.
இது உண்மையாக இருக்கும் பட்சத்தில் இவர் மீது நடவடிக்கை கட்டாயம் எடுக்க வேண்டும் என்று பலரும் கூறி வருகிறார்கள். பல நாட்களாகவே இதுபோன்ற செய்திகள் இவரை பற்றி பரவி வருகிறது. இதற்கான முற்றுப்புள்ளி யார் வைப்பார்கள் என்பது இறைவனுக்கு மட்டுமே தெரியும்.