தமிழ், தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளில் நடித்திருக்கும் நடிகர் பப்லு பற்றி அதிகம் பகிர வேண்டிய அவசியம் இல்லை. ஏனென்றால் தற்போது இவர் தன் காதலியை விட்டு பிரிந்த விஷயம் தான் ட்ரெண்டிங் ஆக இணையங்களில் வலம் வருகிறது.
இவர் 1990 களில் மட்டுமல்லாமல் 2000-தில் தமிழ் தொலைக்காட்சிகளில் வெளிவந்த சீரியல்களிலும் நடித்து பிரபலமான நடிகராக திகழ்ந்தார் ஜோடி நம்பர் நிகழ்ச்சியில் பங்கேற்று சிம்புவோடு வாக்குவாதத்தில் ஈடுபட்டது நினைவில் இருக்கலாம்.
2014 ஆம் ஆண்டில் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்ட வாணி ராணி சீரியலில் நடித்த இவர் பினா என்ற பெண்ணை 1994 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டு பின்பு விவாகரத்து செய்துவிட்டார். இவர்களுக்கு ஆட்டிசம் குறைபாடுள்ள ஒரு மகன் இருக்கிறார்.
இதனை அடுத்து இவர் ஜிம்முக்கு செல்லும்போது 24 வயது ஆன பெண்ணை காதலித்து லிவிங் டுகதர் முறையில் வாழ்ந்து வந்திருக்கிறார். இதனை அடுத்து இவர் தனது காதலியான ஷீத்தலை கப் கேக் என்று அழைத்து பலரும் கூசக்கூடிய வகையில் ரொமான்டிக்கான புகைப்படங்களை எடுத்து வெளியிடுவார்.
இதனை அடுத்து தன்னை திருமணம் செய்து கொள்வார் என்று எதிர்பார்த்த ஷீத்தலை இவர் ஏமாற்றி பல நாட்கள் அவரோடு குடும்பம் நடத்திய இவர் தன்னை திருமணம் செய்து கொள்ள மாட்டார் என்ற நிலைக்கு தள்ளப்பட்ட போது அவரை விட்டு அவரது காதலி பிரிந்து விட்டார்.
இத்தனை நாட்களும் தன்னோடு அந்த சுகத்திற்காக சுயநலமாக வாழ்ந்த அவருடன் வாழ பிடிக்கவில்லை என்று கூறியதோடு இன்ஸ்டால் பக்கத்தில் இருவரும் இணைந்து எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் அனைத்தையும் டெலிட் செய்து விட்டார்.
இதனை அடுத்து இந்த விவகாரம் குறித்து பேசி இருக்கும் வனிதா, பப்லு ஒரு தந்தையாக தனது கடமையை செய்தார். எனினும் அவர் சோர்வாக இருக்கும் போது வயது வித்தியாசத்தை தாண்டி ஒரு ஈர்ப்பு அவர் நம்பிய ஷீத்தலுடன் ஏற்பட்டது.
எனவே வாழ்க்கையில் நாளை என்ன நடக்கும் என்பது எவருக்குமே தெரியாது. நான் கூட நாளைக்கு பப்லு போல வயதில் குறைந்த நபருடன் திருமணம் செய்வதற்கான வாய்ப்பு அமையலாம். அது அவர்களுடைய தனிப்பட்ட விருப்பம் அதில் தலையிடுவது அநாகரிகம் ஆனது என்ற கருத்தை முன் வைத்துதிருக்கிறார்.
இதனை அடுத்து மறைமுகமாக தான் இன்னொரு திருமணத்திற்கு தயாராகி விட்டதை இப்படி வெளிப்படுத்தி இருக்கலாம் என சிலர் எந்த கருத்தை விமர்சனம் செய்து வருகிறார்கள்.