ஆளவந்தான் படத்தால் வந்த நஷ்டம்!!.. கமல்ஹாசனை விரோதமாக பார்க்கும் தயாரிப்பாளர்!..

 

திரையுலகில் வெற்றி படங்களால் பெயர் பெறுவதைப் போல சில நடிகர்கள் தோல்வி படங்களால் மக்கள் மத்தியில் பரபரப்பாக பேசப்படுவார்கள். அந்த வகையில் தமிழ் திரை உலகில் மட்டுமல்லாமல் இந்திய சினிமாவிற்கு புதுமையான விஷயங்களை புகுத்துவதில் திறமை வாய்ந்தவராக திகழ்ந்தவர் தான் உலகநாயகன் கமலஹாசன். 

இவர் தன்னுடைய திறமையான நடிப்பாலும் வேறுபட்ட கதாபாத்திரங்களை ஏற்று அதற்கு ஏற்ப நடிப்பதாலும் திரை உலகுக்கு புதுமையான டெக்னாலஜிகளை உட்பகுத்தக்கூடிய தன்மை கொண்ட கமலை கர்வம் மிக்க கலைஞர் என்று கூறலாம். 

ஷங்கர் இயக்கத்தில் உருவான இந்தியன் திரைப்படம் மாபெரும் வெற்றி எடுத்ததை அடுத்து அதுபோல பத்து மடங்கு பெரிய பட்ஜெட்டில் இந்தியனைப் போல ஒரு சினிமாவை உருவாக்க வேண்டும் என்றும் அந்தப் படமானது இந்திய சினிமாவை திரும்பி பார்க்கக் கூடிய வகையில் இருக்க வேண்டும் என்று இயக்குனர்களுக்கு கமல் அழைப்பு விடுத்தார். 

கமலஹாசனின் இந்த அழைப்பை ஏற்று தயாரிப்பாளர் கலைபுலி எஸ் தாணு பாட்ஷா படத்தை இயக்கிய சுரேஷ் கிருஷ்ணாவிடம் இயக்கத்தை கொடுத்து திரைக்கதை, வசனத்தை கமலிடமே ஒப்படைத்து நீங்கள் சொன்ன மாதிரி உள்ள படத்தை செய்யுங்கள் என்று கூறினார். 

இதனை அடுத்து 2001 ஆம் ஆண்டில் வெளி வந்த ஆளவந்தான் திரைப்படம் தான் கமலின் கலை தாகத்தை தீர்த்துக் கொண்ட திரைப்படம் எனக் கூறலாம். இந்த படத்தில் இவர் இரண்டு வேடங்களில் நடித்திருந்தார். மேலும் அந்த காலகட்டத்திலேயே அதிநவீன டெக்னாலஜியான மோஷன் கண்ட்ரோல், கேமரா ஸ்பெஷல், அனிமேஷன் எபெக்ட் என அனைத்தையும் இந்த படத்தில் புகுத்தி இருந்தார். 

எனினும் கமலஹாசன் எதிர்பார்த்த அளவு படம் வசூல் ரீதியான வெற்றியை பெறவில்லை. இதற்கு காரணம் படத்தின் கதையானது 1984 இல் வெளி வந்த தாயம் என்ற நாவலின் தழுவல் என கூறலாம். இந்நிலையில் இந்த படத்தின் கதை எந்த மக்களாலும் அவ்வளவு எளிதில் புரிந்து கொள்ள முடியவில்லை. 

பெரிய பட்ஜெட்டில் எடுக்க நினைத்த இவர் பட்ஜெட்டுக்கும் மேல் தயாரிப்பாளருக்கு செலவு வைத்ததோடு ஆளவந்தான் படத்தை ரிலீஸ் செய்ய பெரிய நிறுவனங்கள் முன்வந்த போது தயாரிப்பாளர் தாணுவிடம் நீங்களே தனியாக ரிலீஸ் செய்யுங்கள் என்ற ஐடியாவை கொடுத்து தயாரிப்பாளர் தலையில் துண்டை போட்டு விட்டார். 

அந்த அடியில் இருந்து இன்னும் மீள முடியாமல் இருக்கும் தயாரிப்பாளர் கலைப்புலி எஸ் தாணு கமலஹாசனோடு இன்று வரை முகம் கொடுத்து பேசாமல் வைராக்கியத்தோடு தன்னுடைய கோபத்தை வெளிப்படுத்தி வருகிறார்.