பதறி அடித்துக்கொண்டு அமெரிக்காவுக்கு ஓடிய மீனா, குஷ்பூ…!! - விஷயம் தெரிந்தால் ஷாக்காவிங்க..!


அமெரிக்காவில் செட்டில் ஆகி இருக்கும் நடிகர் அழைப்பு விட பதறி அடித்துக்கொண்டு மீனா மற்றும் குஷ்பூ அமெரிக்கா சென்று இருப்பது தற்போது அனைவருக்கும் தெரிந்து விட்டது. அது சரி அவர்கள் எதற்காக அமெரிக்காவை நோக்கி பறந்தார்கள் என்ற விஷயத்தை பற்றி இந்த பதிவில் விரிவாக தெரிந்து கொள்ளலாம். 

தென்னிந்திய சினிமாவில் டாப் நடிகைகளாக திகழ்ந்தவர்கள் தான் மீனா மற்றும் குஷ்பூ. இவர்கள் இருவருமே ஒரு காலகட்டத்தில் தமிழக இளைஞர்கள் விரும்பும் நாயகியாக திகழ்ந்திருக்கிறார்கள். 

அது போலவே என்பது 90 கால கட்டங்களில் தமிழ் சினிமாவில் வில்லனாக வலம் வந்த நடிகர் நெப்போலியன் உங்களுக்கு நினைவில் இருக்கலாம். இவர் சினிமாவில் நடித்ததோடு மட்டுமல்லாமல் நடிகர் சங்க பொறுப்பிலும், அரசியலிலும் ஈடுபட்டு இருந்தார். 

எனினும் சில ஆண்டுகளுக்கு முன்பு நெப்போலியன் மகனின் உடல் பிரச்சினை காரணமாக அமெரிக்காவில் சிகிச்சை மேற்கொள்ள சென்ற அவர் அங்கேயே செட்டில் ஆகி பிசினஸ் மற்றும் அரசியலில் ஈடுபட்டு வந்தார். 

இவர் அமெரிக்காவில் நாஷ்வில்லி டென்னசியில் இருக்கும் சொந்த வீட்டில் இருந்து கொண்டே விவசாயம் செய்து வருவது சில நாட்களுக்கு முன்பு இணையத்தில் பரவி வைரலானது. இந்நிலையில் நெப்போலியன் தன்னுடைய 60-வது பிறந்த நாளை கடந்த 2 - ம் தேதி அன்று கொண்டாடியிருக்கிறார். 

இந்த பிறந்தநாள் விழா கொண்டாட்டத்திற்கு தன்னோடு இணைந்து நடித்த பல பிரபலங்களை அழைத்து பார்ட்டி வைத்திருக்கிறார். அப்படி நெப்போலியினால் அழைக்கப்பட்ட நடிகைகள் மீனா மற்றும் குஷ்பூ.

எனவே இருவரும் அமெரிக்காவுக்கு பறந்து நெப்போலியன் பிறந்த நாளில் அவரோடு இணைந்து பிறந்த நாளை கொண்டாடி வாழ்த்துக்களை கூறி அவருடைய எடுத்துக் கொண்ட புகைப்படத்தையும் பதிவிட்டு இருக்கிறார்கள்.