திரையுலகை பொருத்தவரை பெண்களை விட அதிக அளவு ஆண்களுக்கே முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு வருகிறது என்ற உண்மையான குற்றச்சாட்டை முன் வைத்து ஜோதிகா தற்போது பேசி இருப்பதில் பரவலாக அனைவரிடம் பேசப்படக்கூடிய ஒரு பேசும் பொருளாகிவிட்டது.
எனவே ரசிகர்கள் பெண்களுக்கு முக்கியத்துவம் தரக்கூடிய கதைய அம்சம் வாய்ந்த கதைகளை அதிகளவு பார்ப்பதன் மூலம் கதாநாயகிகளின் அந்தஸ்து உயரும் என்ற கருத்தை முன் வைத்திருக்கிறார்.
எப்போதுமே பெரிய கதாநாயகர்களை மட்டும் தூக்கிப்பிடித்தால் எப்படி கதாநாயகிகள் வளர முடியும் என்ற கேள்வியை கேட்டிருக்கும் இவர், புது இயக்குனர்கள் மட்டுமே பெண்களுக்கு முக்கியத்துவம் தரக்கூடிய கதைகளோடு படம் எடுத்து வருவதாக கூறினார்.
எனவே இனியாவது பெரிய இயக்குனர்கள், கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் தரக்கூடிய கதைகளை எழுத வேண்டும் என்பதை வேண்டுகோளாக விடுத்திருக்கிறார்.
மேலும் இந்தி, மலையாள மொழிகளில் பெண்களை மையப்படுத்தி நிறைய கதைகள் இயக்கப்படுவதாகவும், ஆனால் அது தமிழ் திரை உலகில் நிகழ்வதில்லை என்ற வருத்தத்தை தெரிவித்திருக்கக்கூடிய இவர் திருமணத்திற்கு பிறகு தமிழ் பேச கற்றுக் கொண்டிருப்பதாக கூறினார்.
திருமணத்திற்கு பிறகு குழந்தைகளுக்கு திட்டமிட்டதால் காரணத்தால் தான் சினிமாவில் ஒரு நீண்ட இடைவெளி ஏற்பட்டதாகவும், அதன் பிறகு சினிமாவில் தான் ரீஎன்றி கொடுத்து விட்டதாகவும், தற்போது சினிமாவையும் தாண்டி பல வேலைகள் செய்து வருவதாக கூறினார்.
இவர் சினிமாவையும் தாண்டி ஒரு வாழ்க்கை உள்ளது என்றால் அது குழந்தைகளுக்காகவா? சினிமாவுக்காகவா? என்று கேட்டால் என்ன கூறுவீர்கள் என்று கேள்வியாளர்கள் கேட்ட கேள்விக்கு குழந்தைகள் என்று பதிலை அளித்திருக்கிறார்.