“நான் செஞ்சது உலகமகா தப்பு.. லியோ குறித்து லோகேஷ் கனகராஜ்..!” - விளாசும் விஜய் ரசிகர்கள்..!

 

கோவை மாவட்டத்தை சேர்ந்த லோகேஷ் கனகராஜ் தமிழ் திரையுலகத்தில் அடுத்தடுத்து பல வெற்றிகளை தந்து முன்னணி இயக்குனர்களின் வரிசையில் ஒருவராக மாறிவிட்டார். 

லோகேஷ் கனகராஜ் பெயரானது உலகநாயகன் கமலஹாசனை வைத்து இயக்கிய விக்ரம் படத்திற்கு பிறகு ஒரு மிகப்பெரிய சிம்மாசனத்தை இவருக்கு தமிழ் திரை உலகில் பெற்று தந்து விட்டது. 

மேலும் அண்மையில் லோகேஷ் மற்றும் விஜய் கூட்டணியில் வெளி வந்த லியோ திரைப்படத்தின் முதல் பாதி சிறப்பாக இருந்தது என்றும் அடுத்த பாதி சுமார் என்று கலவை ரீதியான விமர்சனங்கள் வெளி வந்தது. 

இதனை அடுத்து இந்த படத்தை பற்றி லோகேஷ் கனகராஜ் அண்மை பேட்டி ஒன்றில் கூறிய விஷயமானது, தற்போது விஜய் ரசிகர்களின் மத்தியில் ஒரு மிகப்பெரிய கலவரத்தை ஏற்படுத்தி விட்டது என கூறலாம். 

இதற்கு காரணம் இவர் பேட்டியின் பேசிய பேச்சில் இவர் செய்த உலக மகா தவறு ரிலீஸ் தேதியை அறிவித்துவிட்டு, அதன் பின் படப்பிடிப்புக்கு சென்றதால் இந்த நிலைமை ஏற்பட்டுள்ளது என்பதை கூறினார். இதனைத் தொடர்ந்து லோகியை விஜய் ரசிகர்கள் விலாசி தள்ளி இருக்கிறார்கள். 

மேலும் லியோ படத்தின் இரண்டாம் பகுதி சரியாக அமையாததற்கு காரணம் இதுவாக கூட இருக்கலாம் என்றும் அந்த விமர்சனங்களை தான் ஏற்றுக் கொள்வதாகவும் கூறியிருக்கிறார். 

இனி வரும் காலங்களில் இது போன்ற தவறுகள் நிகழாமல் பார்த்துக் கொள்வேன் என்று கூறி இருக்க கூடிய இவர் லியோவின் இரண்டாவது பாகம் வருமா? என்ற கேள்விக்கு எந்த விதமான பதிலையும் தரவில்லை. 

எனவே லோகேஷ் கனகராஜ் பேசிய இந்த பேச்சு தான் தற்போது இணையத்தில் வைரலாக மாறிவிட்டதோடு விஜய் ரசிகர்கள் ஒவ்வொரு வரும் பேசிக்கொள்ளும் பேசும் பொருளாக மாறி விட்டது. 

லியோ படத்தின் தோல்வியை இப்படி இவர் சொல்வார் என்பதை யாரும் சற்றும் எதிர்பார்க்காத விதத்தில் யோசித்து கூறுகிறார். இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் மறக்காமல் வண்ணத்திரை பக்கத்திற்கு லைக்குகளை கொடுத்து உங்கள் நண்பர்களுக்கும் ஷேர் செய்யுங்கள்.