மற்ற நடிகைகளுக்கு அவர்களது உணர்வை புரிந்து கொண்டு வாய்ப்பளிக்கூடிய தரமான நடிகராக தனது கணவர் விளங்குவதாக தற்போது பிரபல நடிகை ஒருவர் தன் கணவருக்கே பிட்டு போட்ட காரணம் என்ன என்பது தற்போது திரையுலக வட்டாரத்தில் பேசும் பொருள் ஆகிவிட்டது.
தான் காதலித்து திருமணம் செய்து கொண்ட கணவருக்கு எந்த ஒரு அசிங்கமும் ஏற்பட்டு விடக்கூடாது என்ற எண்ணத்தில் மாஸ் நடிகரோடு நடிக்க வாய்ப்பு கிடைத்தும் அந்த வாய்ப்பை வேண்டாம் என விட்டுக்கொடுத்து விட்ட நிலையில் தற்போதும் இளம் நடிகைகளோடு பிகினி உடையில் இருக்கும் கவர்ச்சி புயலோடு கணவர் நடித்து வருவது இந்த மனைவிக்கு சுத்தமாக பிடிக்கவில்லை.
எனினும் ஒரு காலத்தில் இவரும் அது போலவே நடித்து பல ரசிகர்களின் இதயத்தை கொள்ளை அடித்தவர் என்பதை மறந்துவிட்டார். கணவரை திருமணம் செய்து கொண்ட பிறகு சினிமாவிற்கு பை, பை சொன்னார்.
மேலும் சினிமாவின் மேல் இருந்த தீராத காதலால் கணவரை தாஜா பண்ணி திரை உலகிற்கு ரீஎன்றி கொடுத்து குறிப்பிட்ட கதாபாத்திரங்களை தேர்வு செய்து நடித்து வருகிறார்.
அதுவும் டாப் நடிகர்களை தேர்வு செய்யாமல் வயதான ஹீரோக்களுக்கு ஜோடியாக நடித்து வரும் இவர் ஹீரோயினியா இல்லாமல் கதையின் நாயகியாக நடித்து வருவதாக சமீபத்து பேட்டி ஒன்றில் பேசி தன் கணவரையும் புகழ்ந்திருக்கிறார்.
தன் மனைவி மீண்டும் ஹீரோயினியாக நடிக்க ஆரம்பித்து பல வருடங்கள் ஆன நிலையில் அந்த பிரைட் நடிகர் மனைவியுடன் பழைய படி இணைந்து நடித்தால் தனது மார்க்கெட் காலி ஆகிவிடும் என அறிந்து கொண்டு நீ உன் ரூட்டில் பயணம் செல். நான் என் ரூட்டில் செல்கிறேன் என் விஷயத்தில் தலையிட வேண்டாம் என்று கூறிவிட்டாராம்.
இதனை அடுத்த தான் பெண்களுக்கு முக்கியத்துவம் தரக்கூடியவர் தன் கணவர் என புகழ்ந்து பேசி பெண்களை மையப்படுத்தி எடுக்கும் படத்தில் அவர் நடிக்க வேண்டும் என்பதை மறைமுகமாக சுட்டிக்காட்டி தனக்கு ஒரு சான்ஸ் கொடுப்பாரா? என்ற ஏக்கத்தில் காத்திருப்பதாக பலரும் கேலி பேசி வருகிறார்கள்.