பிரச்சனைகள் யார் வாழ்க்கையில் தான் இல்லை. பிரபலங்கள் முதல் அன்றாடம் காட்சிகள் வரை தற்போது விவாகரத்துக்கள் அதிகரித்து வருகிறது. இதற்கு காரணம் சின்ன பிரச்சினையை ஊதி பெருசு பண்ணுவதோடு மட்டுமல்லாமல் ஈகோ காரணமாக கணவன் மனைவி இடையே பிரிவுகள் அதிகரித்து விட்டது.
அந்த வகையில் விஜய் தொலைக்காட்சியில் பல ஆண்டுகளாக சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் தொகுத்து வழங்கும் விஜே பிரியங்கா தேஷ் பாண்டே பற்றி உங்களிடம் அதிக அளவு பகிர வேண்டிய அவசியம் இல்லை.
பிரியங்காவின் வித்தியாசமான குரலாலும் நகைச்சுவை தன்மையாலும், நிகழ்ச்சியை வெகு நேர்த்தியாக மக்கள் மத்தியில் கொண்டு சேர்ப்பதில் இவர் வல்லவர்.
இவர் சில ஆண்டுகளுக்கு முன்பு விஜய் டிவியில் டெக்னிசியனாக பணியாற்றி வந்த பிரவீன் குமாரை திருமணம் செய்து கொண்டார்.
திருமணத்திற்கு பிறகு இவரது பேச்சிலும் மூச்சிலும் பிரவீன்.. பிரவீன் என்ற கணவனின் பேச்சே மேலோங்கி இருந்தது.
இதனை அடுத்து இவர்களுக்குள் என்ன நடந்தது என்று தெரியவில்லை. சில காலமாக இருவரும் பிரிந்து வாழ்வதாக தகவல்கள் வெளி வந்தது.
இதனைப் பற்றி தற்போது பிரபல நடிகர் மற்றும் திரைப்பட விமர்சகர் ஆன பயில்வான் ரங்கநாதன் அவர்களின் பிரிவுக்கான காரணத்தை கூறி கடுமையான அதிர்வலைகளை ரசிகர்களின் மத்தியில் ஏற்படுத்தி விட்டார்.
ஆரம்பத்தில் இவர்கள் வாழ்க்கையை மிகவும் மகிழ்ச்சிகரமாக சென்றுள்ளது.
இதனை அடுத்து பிரியங்கா தன்னுடைய துறையில் அடுக்கடுக்கான வெற்றியைப் பெற்று வளர்ச்சி அடைய, இந்த வளர்ச்சி காரணமாக பிரியங்காவிற்கும் அவரது கணவருக்கும் இடையே ஒரு சின்ன இடைவெளி ஏற்பட்டு பிரச்சனைகள் வர தொடங்கியது.
எனினும் இதை சகித்துக் கொள்ளாத பிரியங்கா சின்னப் பிரச்சனையை சரியாக கையாலாமல் தனது அம்மா வீட்டுக்கு சென்று தங்கியதன் காரணமாக விஷயம் பெரிதாக வெடித்தது.
அடுத்து இவர் பிக் பாஸ் வீட்டில் கலந்துகொண்ட சமயத்தில் தனது கணவரைப் பற்றி எதுவும் பேசக்கூடாது என்ற நிபந்தனை விதித்ததின் காரணத்தால் அங்கும் தனது அம்மா புராணத்தையே பேசி தன் கணவர் காண்டாக காரணமாகிவிட்டார்.
மேலும் பிரியங்கா பிரவீனோடு சேர்ந்து வாழ சம்மதித்தாலும் பிரவீனுக்கு சேர்ந்து வாழ்வதற்கு இஷ்டமில்லை என்று பிரபல நடிகர் மற்றும் திரை விமர்சகர் பயில்வான் ரங்கநாதன் தெரிவித்திருக்கிறார்.