“நீங்க நினைக்கிற மாதிரி நான் உத்தமி இல்ல.. இப்ப என்ன சொல்லறீங்க..” - ஓப்பனாய் பேசிய பிக் பாஸ் மாயா..!

 


விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் மிகவும் பிரபலமான நபராக மாறி இருப்பவர் மாயா. இவர் தமிழில் சில திரைப்படங்களில் துணை நடிகையாக நடித்திருக்கிறார். 

தொடரி, மகளிர் மட்டும், வேலைக்காரன் போன்ற சில படங்களில் நடித்து தனது அற்புத நடிப்பை வெளிப்படுத்தினார். தற்போது பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பலரது நெகட்டிவ் விமர்சனங்களை பெற்று இருக்கிறார். அந்த வகையில் தனக்கு என்று ஒரு ரசிகர் படையை வைத்துக் கொண்டிருக்கிறார். 

இவர் செய்யக்கூடிய அலப்பறைகள் ஒவ்வொன்றும் பார்ப்பவர்களின் முகம் சுளிக்க கூடிய வகையில் இருக்கும். மேலும் இவர் செய்த செயலால் தான் பிரதீப் பிக் பாஸ் வீட்டை விட்டு சென்று விட்டார் என்று பலரும் பல விதமான கருத்துக்களை கூறி வருகிறார்கள். 

அதுமட்டுமல்லாமல் பிக் பாஸ் வீட்டில் நிகழும் பிரச்சனைகளுக்கு முழுமையான காரணம் இவராக தான் இருக்கும். இவர் ஒரு சைலன்ட் கில்லர் என்பது போல சிலர் பேசுகிறார்கள். அதுமட்டுமல்லாமல் மாயா நிஜ வாழ்வில் ஒரு லெஸ்பியன் என்ற கருத்துக்களும் நிலவி வருகிறது.

இதை உறுதி செய்யக்கூடிய விதமாக இந்த போட்டியின் போட்டியாளராக இருக்கும் விசித்ராவும் தனது முன்னாள் கணவர் மாயாவின் லெஸ்பியன் நிறுவனத்திற்கு நிதி உதவி செய்தவர் என்பதை கூறியிருந்தார். பிக் பாஸ்க்கு பிறகு மாயாவுக்கு பல படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்துள்ளது. 

மேலும் இவர் நடிப்பில் வெளிவந்த விக்ரம் திரைப்படத்தில் இவர் விலை மாதுவாக நடித்திருந்தார். இது பற்றி சில கேள்வி எழுப்பி இருந்த நிலையில் அதற்கு இவர் தான் ஒன்றும் உத்தமி அல்ல எனவும், பல தவறுகளை செய்துள்ளதாகவும், தன் பக்கமும் தவறு இருப்பதாகவும் கருத்துக்களை கூறி அதிர்ச்சி அடைய வைத்து விட்டார். 

மேலும் சிலர் இதுதான் மாயாவின் உண்மையான முகம் போல இப்ப உங்களுக்கு புரியும் அவரை ஏன் லெஸ்பியன் என்று கூறினார்கள் என பலவிதமான கருத்துக்களை கூறியிருக்கிறார்கள்.