ஆரம்ப நாட்களில் பிரதீப் ரங்கநாதன் குறும்படங்களை இயக்கி வந்தார். இதனை அடுத்து கோமாளி என்ற படத்தில் இயக்குனராக களம் இறங்கினார் .பார்ப்பதற்கு சின்னப் பையன் மாதிரி இருக்காரே இவரால் படம் எடுக்க முடியுமா? என்று யோசித்தவர்களின் மத்தியில் நல்ல படைப்பை கொடுத்து சிறந்த பெயரை பெற்றார்.
இந்த படம் சூப்பர் ஹிட் தந்ததை அடுத்து அவர் ஹீரோவாக நடிக்கலாம் என முடிவு செய்தார் அத்தோடு வளரும் இயக்குனராக இருக்கும் நேரத்தில் பெரிய ஹீரோவை வைத்து படம் எடுப்பதை விட்டுவிட்டு இவரே நடிக்கிறாரே என்று பலரும் பல வகையில் பேசிய நிலையில் அதைப் பற்றி கவலைப்படாமல் லவ் டுடே படத்தை கொடுத்து மீண்டும் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தினார்.
குறைந்த பட்ஜெட்டில் உருவாக்கப்பட்ட இந்த படம் 80 கோடி வரை வசூலில் சாதனை புரிந்தது. இதனை அடுத்து விஜய் படத்தை இயக்கும் வாய்ப்பு கிடைத்தும் கூட இனிமேல் நான் இயக்கம் படத்தில் நான் மட்டுமே நடிப்பேன் என்று சொல்லிவிட்டதாக கிசுகிசுக்கள் எழுந்தது.
தற்போது இவர் ஒரு புதிய படத்தில் நடிக்க ஒப்பந்தமாக இருக்கிறார். இந்த படத்தை நயன்தாராவின் கணவரும் இயக்குனருமான விக்னேஷ் சிவன் இயக்க இருக்கிறார். இந்த படத்திற்கான வேலைகள் முழுமூச்சில் நடந்து வருகிறது.
இந்த படத்திற்காக முகத்தை அழகாக பளபளப்பாக மாற்ற வேண்டும் என்று சில சிகிச்சைகளை பிரதீப் செய்ததாக சொல்லப்படுகிறது. எனினும் இந்த சிகிச்சை அவர் முகத்திற்கு செட்டாகாமல் முகம் வெளிரி போனது போல உள்ளது.
மேலும் பார்ப்பதற்கு வெள்ளைக்காரன் மாதிரி இருப்பதால் இந்த தோற்றத்தை வைத்து எப்படி இவர் விக்னேஷ் சிவன் படத்தில் நடிப்பார் என்ற கேள்வி தற்போது எழுந்துள்ளது.
இந்த நிலையை மாற்ற இவர் மேலும் மேல் சிகிச்சை ஏதாவது மேற்கொள்வாரா? என்பது இனிவரும் நாட்களில் தான் தெரியவரும். இதை அடுத்து ரசிகர்கள் சொந்த செலவில் சூனியம் வைத்துக் கொள்வது போல அழகாக இருந்த இவரது முகத்தை ஏன் இப்படி கெடுத்துக் கொண்டார் என்று பேசி வருகிறார்கள்.