கேப்டன் செய்த உதவியை மறந்துட்டாங்க..! இப்படியா? விசுவாசம் இல்லாம போவாங்க..!



குழந்தை நட்சத்திரமாக திரையுலகில் அறிமுகமாகி தற்போது தமிழ் சினிமாவில் முன்னணி நாயகனாக உயர்ந்திருக்கும் தளபதி விஜய் பற்றி உங்களுக்கு அதிகம் பகிர வேண்டிய அவசியம் இல்லை. 

தமிழ் திரையுலகில் நாளைய தீர்ப்பு என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகம் செய்யப்பட்ட நிலையில், இவர் நடித்த ஆரம்ப கட்ட திரைப்படங்கள் இவருக்கு வெற்றி படங்களாக அமையவில்லை. 

இதனை அடுத்து இவரது தந்தையின் முயற்சியால் தான் சினிமாவில் இன்று நிலைத்து நிற்க முடிகிறது என்று கூறலாம். இதற்கு காரணம் இவர் காதலுக்கு மரியாதை என்ற திரைப்படம் இவருக்கு திருப்புமுனையாக அமைந்தது. 

மேலும் அவர் இன்று இந்த அளவு வளர்ந்து இருக்க காரணமானவர் நடிகர் விஜயகாந்த். விஜய் ஆரம்ப கால படங்கள் தோல்வி அடைந்த சமயத்தில் இவர் தந்தையான எஸ் ஏ சந்திரசேகர், விஜயகாந்த் இடம் சென்று தனது மகனின் படத்தில் கௌரவ வேடத்தில் நடிக்குமாறு கேட்டுக் கொண்டார். 

இதனை அடுத்து உச்சகட்ட நட்சத்திரமாக திகழ்ந்த விஜயகாந்த் விஜய்க்கு உதவி செய்யும் பொருட்டும், விஜய் வளர வேண்டும் என்ற எண்ணத்தில் செந்தூரப்பாண்டி படத்தில் நடிப்பதற்கு ஒப்புக்கொண்டார். 

மேலும் மிகப்பெரிய நடிகர் ஒரு படத்தில் கௌரவ வேடம் ஏற்று நடிக்கும் போது மக்கள் அனைவரும் அந்த படத்தை கண்டிப்பாக பார்ப்பார்கள் என்ற எண்ணம் உண்மையானது. 

இந்நிலையில் தன்னை வளர்த்து விட்ட விஜயகாந்த் தற்போது மருத்துவமனையில் உள்ளதை கேள்விப்பட்டு இருக்கக்கூடிய விஜய், ஒரு முறை கூட நேரில் சென்று விஜய காந்தை பார்க்கவில்லை. 

அதுமட்டுமல்லாமல் சூர்யா போன்ற நடிகர்கள் அவர்களது பிரார்த்தனையை எக்ஸ் தளத்தில் தெரிவித்து இருந்த போதும், விஜய் அதுபோல எந்த ஒரு பதிவையும் வெளியிடாதது நெட்டிசன்கள் மத்தியில் பலவிதமான கருத்துக்களை உருவாக்கி உள்ளது. 

இதனை அடுத்து சற்றும் எதிர்பார்க்காத இந்த செயலால் விஜயின் பெயர் சற்று டேமேஜ் ஆகி ரசிகர்களின் மத்தியிலும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.