1982 ஆம் ஆண்டு தமிழ் சினிமாவில் வெளி வந்த மணல் கயிறு என்ற அட்டகாசமான திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்த நடிகை வினோதினியை உங்களுக்கு நினைவில் இருக்கலாம்.
ஆரம்ப காலகட்டங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்த வினோதினி பாலு மகேந்திரா இயக்கத்தில் வெளி வந்த வண்ண வண்ண பூக்கள் என்ற தமிழ் திரைப்படத்தில் நடிகர் பிரசாந்துக்கு ஜோடியாக நடித்திருந்தார்.
இவர் திரைப்படங்கள் மட்டுமல்லாமல் சீரியல்களிலும் கவனத்தை செலுத்தி வந்த வினோதினி திருமணத்திற்கு பிறகு இரண்டிலும் நடிப்பதை தவிர்த்து விட்டார்.
இதனை அடுத்து இவர் அண்மையில் ஒரு யூடியூப் சேனலுக்கு பேட்டி ஒன்றினை கொடுத்திருந்தார்.
அதில் அவர் தனது வாழ்க்கையில் நடந்த மறக்க முடியாத விஷயத்தை மிகவும் உருக்கமாக கூறி ரசிகர்களை சோகத்தில் தள்ளினார்.
மேலும் அவர் பேசுகையில் 20 வயதுள்ள இரண்டு பேர் பைக்கில் வந்து தனது கணவர் மீது வண்டியை மோதிவிட்டு சென்றார்கள்.
இவர்களைப் பற்றிய வேறு எந்த விஷயமும் எங்களுக்குத் தெரியாது.இவர்கள் விபத்தை ஏற்படுத்தியதற்காக சுமார் 10,000 ரூபாய் அபராதத்தை செலுத்தி விட்டு சென்று விட்டார்கள்.
ஆனால் இந்த விபத்தை அடுத்து தன் குடும்பம் மிகப் பெரிய துயரத்தை சந்தித்ததாகவும், அந்த சூழ்நிலையில் தான் தனி ஆளாக இருந்து யாருடைய உதவியும் கிடைக்காமல் திணறியதாகவும் கூறி இருக்கிறார்.
மேலும் நடிகர் சங்கத்தை சேர்ந்தவர்கள் நினைத்திருந்தால் விபத்துக்கு காரணமானவர்கள் யார் என்று கண்டுபிடித்து நடவடிக்கை எடுத்து எங்களுக்கு உதவி செய்திருக்கலாம். ஆனால் அதனை அவர்கள் செய்யவே இல்லை.
எனவே யாருடைய உதவியுமே தங்களுக்கு கிடைக்காமல் தனி ஆளாக குடும்பத்தை இந்த அளவு கொண்டு வர பல விதமான கஷ்டங்களை அனுபவித்ததாக பேட்டியில் கூறியிருக்கிறார்.
இந்த பதிவு உங்களுக்குப் பிடித்திருந்தால் மறக்காமல் வண்ணத்திரை பக்கத்திற்கு லைக்குகளை அள்ளித் தந்து உங்கள் ஆதரவை தாருங்கள்.