ரசிகர்களால் இளைய தளபதி என்று அன்போடு அழைக்கப்படும் விஜயின் தனிப்பட்ட வாழ்க்கை குறித்து கடந்த இரண்டு ஆண்டுகளாக வரக்கூடிய செய்திகள் அனைத்தும் ரசிகர்களின் மத்தியில் ஒருவித தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது என கூறலாம்.
அப்படி வெளி வரக்கூடிய செய்திகள் வதந்தியாக இருந்தால் தவறில்லை. ஆனால் தளபதி விஜயின் பெயரை கெடுப்பதற்காகவும், அவரது வளர்ச்சியை தடுப்பதற்காகவும் இத்தகைய பேச்சுக்கள் மற்றும் கிசுகிசுக்கள் எழுகிறதா? என்ற எண்ணம் தற்போது மிகப் பெரிய கேள்வியாக ரசிகர்களின் மத்தியில் ஏற்பட்டுள்ளது.
இதற்கு நெருப்பில்லாமல் புகையுமா? என்ற பழமொழி ஒன்று முன் வைக்கப்பட்டு உள்ளது. அதுமட்டுமல்லாமல் நடிகை கீர்த்தி சுரேஷ் உடன் விஜய் கொண்டிருக்கும் உறவால் விரைவில் இரண்டாவது திருமணம் நடக்க வாய்ப்புகள் உள்ளது என்று கூறப்படுகிறது.
இதற்கு காரணம் கீர்த்தி சுரேஷின் கார் நடிகர் விஜய் நண்பரான சஞ்சய் வீட்டில் நிறைய நாட்கள் நிற்கிறது. மேலும் விஜய் வீட்டில் காரை பார்த்தால் விவகாரம் பெரிதாகிவிடும் என்பதால் தான் நடிகர் சஞ்சய் வீட்டில் காரை பார்க் செய்துவிட்டு அங்கிருந்து வேறு கார் மூலம் கீர்த்தி சுரேஷ் விஜய் காண செல்வதாக வீடியோ ஆதாரத்தோடு செய்திகள் வெளியானது.
அதுமட்டுமல்லாமல் கீர்த்தி சுரேஷ் தற்போது நடித்து வரும் ரிவால்வர் ரீட்டா படத்தின் முழு தயாரிப்பு செலவையும் நடிகர் விஜய் மறைமுகமாக ஏற்றி இருப்பதாக தகவல்கள் வெளி வந்த வண்ணம் உள்ளது.
இந்த நிலையில் நடிகர் விஜய் தன் வீட்டில் தனியாகத்தான் வாழ்ந்து வருகிறார்.
மேலும் அவரின பெற்றோர்கள், மனைவி, மக்கள் யாரும் உடன் இல்லை என்ற தகவல் கடந்த சில வாரங்களாகவே இணையத்தை திணற வைத்தது.
தன் மனைவி குழந்தைகளை விட்டு பிரிந்து வாழ்கிறாரா? என்ற கேள்விக்கு விஜய் என்ன பதில் சொல்லுவார்? விரைவில் இவரின் பதிலுக்காக ரசிகர்கள் அனைவரும் காத்திருக்கிறார்கள்.
சில காலங்களாகவே விஜயின் திரைப்பட விழாக்களில் அவரது மனைவியோ, குழந்தைகளோ கலந்து கொள்ளாமல் இருந்து வருகிறார்கள். மேலும் இவர் பெற்றோரை தனியாக சந்தித்து வருகிறார்.
இதையெல்லாம் வைத்து கூட்டி கழித்து பார்த்தால் விவகாரம் உண்மையாக இருக்குமோ? என்று கூட சிலர் பேசி வருகிறார்கள்.
இந்த பேச்சுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்றால் விஜய் தனது வீட்டில் தனியாக வசிக்க என்ன காரணம்? மனைவி, குழந்தைகள் எங்கே என்ற கேள்விக்கு விஜய் பதில் அளித்தால் மட்டுமே முடியும்.
இதற்கான விடை விரைவில் கிடைக்குமா? என்பதை நாம் பொறுத்திருந்து பார்க்கலாம்.