தமிழ் திரையுலகில் காதலர் தினத்திற்கு என்றுமே கொண்டாட கூடிய வகையில் திரையிடப்பட்ட திரைப்படம் தான் காதலர் தினம். இந்த திரைப்படமானது இயக்குனர் கதிர் இயக்கத்தில் 1999 இல் நடிகர் குணால் மற்றும் சோனாலி நடிப்பில் வெளி வந்தது.
சோனாலிக்கு பாம்பே திரைப்படத்தில் ஹம்மா, ஹம்மா என்ற பாடலுக்கு குத்தாட்டம் போட்டதை தொடர்ந்து இந்தப் படத்தில் நடிக்க கூடிய வாய்ப்பு கிடைத்தது. இதனை அடுத்து பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகையாக 90 காலகட்டங்களில் சோனாலி திகழ்ந்தார்.
மேலும் இவர் 2002இல் கோல்டு பெல் என்பவரை திருமணம் செய்து கொண்டு சினிமாவில் இருந்து விலகி இருந்தார். தற்போது இவருக்கு ரன்வீர் பெல் என்ற ஒரு மகனும் இருக்கிறார்.
2018 ஆம் ஆண்டு புற்றுநோயால் பாதிக்கப்பட்ட சோனாலி அமெரிக்காவில் சென்று சிகிச்சை பெற்று குணமடைந்தார்.
அதனை அடுத்து புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதலாக பேசியும் விழிப்புணர்வுகளை ஏற்படுத்தும் பணியிலும் ஈடுபட்டு வருகிறார்.
11 ஆண்டுகளுக்குப் பின் லவ் யூ ஹமீஷா என்ற படத்தில் நடித்து ரசிகர்களின் மனதை கொள்ளை கொண்டார்.
இதனை அடுத்து சினிமாவில் தற்போது கவனத்தை செலுத்தி வருவதோடு, வெப் தொடர்களிலும், தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் கலந்து கொண்டிருக்கிறார்.
இப்போது சமூக வலைத்தளத்தில் இவர் வெளியிட்டு இருக்கக்கூடிய க்யூட்டான புகைப்படங்களை பார்த்து அட இது நமது காதலர் தின பட ரோஜாவா? என்ற கேள்வியை ஆச்சரியத்தோடு ரசிகர்கள் கேட்டிருக்கிறார்கள்.
மேலும் இந்த புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் அதிக அளவு பகிரப்பட்டு ரசிகர்களின் பேசும் பொருளாகி விட்டது என கூறலாம்.