வீணாய் வாயை விட்டு வம்பில் மாட்டிய விஷால் - வெளுத்து வாங்கும் பிரபலம்..!


சமீப காலமாக அண்ணன் விஷால் எங்கு இருக்கிறார் என்று கேட்கக் கூடிய அளவிற்கு எந்த விதமான தகவல்களும் இவரை பற்றி வெளிவராத நிலையில், தற்போது மார்க் ஆண்டனி வெற்றிக்கு பிறகு மீண்டும் ஆக்டிவ் மோடுக்கு விஷால் வந்துவிட்டார் என கூறலாம். 

இதனை அடுத்து வழக்கம் போல் வாய்க்கு வந்த அரசியல் கருத்துக்களை அள்ளி வீசுவது என ஆரம்ப நாட்களில் இவர் செய்த செயல்களை மீண்டும் செய்ய ஆரம்பித்து விட்டார். 

அதற்கு உதாரணமாக இவர் சில தினங்களுக்கு முன்பு பேசிய வீடியோ ஒன்று கடுமையான சர்ச்சையை ஏற்படுத்தி விட்டது. இதற்குக் காரணம் அண்மையில் சென்னை புயலால் பாதிக்கப்பட்ட அதிகமான வெள்ளம் அங்கு தேங்கி இருந்தது.

இதனை அடுத்து புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு முதலில் எம்எல்ஏக்கள் வாங்க.. என்று விஷால் சொல்ல அதற்கு பலரும் ஆதரவு தெரிவித்தார்கள். இந்நிலையில் ஆளும் கட்சியை தாக்குவது போல் இவரது பேச்சு அமைந்து விட்டதால், ஆளுங்க கட்சியை சார்ந்தவர்கள் கோபப்படாமல் இருப்பார்களா? குறிப்பாக சென்னை மேயர் வெகு கோபமாக விஷாலுக்கு பதிலடியை தந்திருக்கிறார். 

இந்த பதிலடியில் இவர் குறிப்பாக பேசிய பேச்சானது அரசியல் எதுவும் செய்யாதீங்க.. ஆனா கோரிக்கை மட்டும் இருந்தா சொல்லுங்க.. என்று கோபமாக பேசிய பேச்சு விஷாலை தாக்கிய பேச்சாகத்தான் இருக்கும். எனவே இந்த அசிங்கம் உங்களுக்கு தேவையா? என்று ரசிகர்கள் பலர் கேள்வியை எழுப்பி இருக்கிறார்கள். 

இன்னும் சிலர் ரசிகர்களோ வாயை வைத்து சும்மா இருங்க. எதற்கு வெட்டி வம்பை விலைக்கி வாங்கிக் கொள்கிறீர்கள் என்று அட்வைஸ் செய்து இருக்கிறார்கள். தற்போது விஷாலின் பேச்சும், மேயரின் பதிலடிக்கும் தான் இணையத்தில் வைரலாக மாறி உள்ளது.