தமிழ் திரை உலகில் இந்த காமெடி நடிகர் திரைப்படத்தில் நடிக்காத போதும் மீம்ஸ் மூலம் அதிக அளவு ரசிகர்களின் மனதில் தனக்கு என்று ஒரு இடத்தை பிடித்துக் கொண்ட நடிகர், யார் என்று கேட்டால் பட்டென்று நீங்கள் வடிவேல் என்று கூறி விடுவீர்கள்.
அந்த அளவுக்கு அந்த நடிகர் தனது உடல் மொழியால் நகைச்சுவைகளை வாரி வழங்கி ரசிகர்களை சிரிப்பு வெள்ளத்தில் நனைய விட்டவர். இவர் ராஜ்கிரனால் அறிமுகம் செய்யப்பட்டார்.
ஆரம்ப நாட்களில் புகழ்பெற்ற காமெடியர்களாக திகழ்ந்த கவுண்டமணி, செந்தில் நடித்த சில படங்களில் ஒரு துணை காமெடியனாக களம் இறக்கப்பட்ட இவர் கிழக்கு சீமையிலே என்ற திரைப்படத்தின் மூலம் தனது காமெடி திறமையை மக்கள் மத்தியில் வெளிப்படுத்தி தனக்கு என்று ஒரு பாணியை வகுத்துக் கொண்டு முன்னேறியவர்.
இவர் நடிப்பில் குறையே சொல்ல முடியாது. அந்த அளவிற்கு நடிப்பில் கெட்டிக்காரரான இவர் குணத்தை பொறுத்த வரை சோடை போனவராகவே இருந்திருப்பதாக இவரோடு நடித்த சக காமெடி நடிகர்கள் கூறியிருக்கிறார்கள்.
எவ்வளவு தான் கையில் பணம் இருந்தாலும் சல்லி பைசா கூட செலவு செய்ய மாட்டார். அந்த அளவுக்கு கருமியான இவர் யாருக்கும் இதுவரை பணம் கொடுத்து உதவியதே இல்லை.
இதை விட கொடுமை மனது சிறுத்த இவர் தன்னைவிட காமெடியில் யாராவது அதிக கை தட்டல்களை வாங்கிவிட்டால் அடுத்த படத்தில் தன்னோடு இணைந்து நடிக்க விடமாட்டாராம்.
அந்த அளவுக்கு குறுகிய புத்தி கொண்டவர் என அண்மை பேட்டியில் அவரோடு இணைந்து நடித்த நடிகர்கள் விமர்சனம் செய்திருக்கிறார்கள்.
அது மட்டுமல்லாமல் நடிகர் கஞ்சா கருப்பு வடிவேலுவை பற்றி பேசுகையில் யாருக்கும் உதவி செய்ய மாட்டார்.
யார் வீட்டுக்கு போனாலும் வாசலில் நின்று கொண்டு பெட்ரோலுக்கு 1500 ரூபாய் கொடுங்கள் என்று கேட்பார் என கூறி கடுமையான அதிர்ச்சியை தந்துவிட்டார்.
ஆனால் கருமியாக இருக்கும் இவர் இன்று நல்ல முறையில் தான் இருக்கிறார்.
ஆனால் நானும் பலருக்கும் பல வகைகளில் உதவியை செய்து இந்த நிலைமையில் இருக்கிறேன். நல்லதுக்கு எப்போதும் காலம் இல்லை என்று கஞ்சா கருப்பு புலம்பித் தள்ளி இருக்கிறார்.
எது எப்படியோ காமெடி நடிகர் வடிவேலு என்றால் நல்ல பெயர் இல்லாமல் டேமேஜ் ஆன பெயரினை தான் பெற்றிருக்கிறார் என பலரது கருத்துக்களையும் ஒப்பீடு செய்து கூறலாம்.