தென்னிந்திய திரை உலகில் நீண்ட காலமாக தனது அற்புத நடிப்புத் திறனால் ரசிகர்களை அதிகளவு கவர்ந்து லேடிஸ் சூப்பர் ஸ்டார் என்ற பெயரை பெற்றிருக்கும் கேரளத்து மங்கையான நடிகை நயன்தாராவின் அன்னபூரணி திரைப்படம் அண்மையில் வெளிவந்தது.
இவர் தமிழ் திரையுலகில் ஐயா என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர். தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு, மலையாளம் என அனைத்து மொழிகளிலும் நடித்ததோடு சமீபத்தில் ஜவான் திரைப்படத்தின் மூலம் பாலிவுட்டில் எண்ட்ரி கொடுத்து மாபெரும் வெற்றியை பெற்றிருக்கிறார்.
ஷாருக்கான் உடன் இணைந்து நடித்த இந்த திரைப்படமானது கடந்த செப்டம்பர் மாதம் வெளிவந்து சுமார் ஆயிரம் கோடி ரூபாய் அளவு வசூலில் பட்டையை கிளப்பியது. எனவே இவருக்கு மேலும் பல பாலிவுட் படங்களில் நடிக்கக்கூடிய வாய்ப்பு கிடைக்கும் என அனைவரும் பேசி வருகிறார்கள்.
இந்த சூழ்நிலையில் சமீபத்தில் ஜெயம் ரவியோடு இணைந்து நடித்த இறைவன் திரைப்படம் கலவை ரீதியான விமர்சனத்தை பெற்றது. இதனை அடுத்து நயன்தாராவின் 75 ஆவது திரைப்படமான அன்னபூரணி திரைப்படத்தை நிலேஷ் கிருஷ்ணா இயக்க பல நட்சத்திர பட்டாளங்கள் நடித்திருந்தது.
எப்போதுமே தான் நடித்த படங்களுக்கான பிரமோஷன் பணிகளில் ஈடுபடாத நயன்தாரா ஜவான் திரைப்படத்திற்கு பிறகு பிரமோஷன் பணிகளில் ஈடுபட்டு வருகிறார். அந்த வகையில் இவர் அன்னபூரணி படத்திற்காக பிரமோஷனில் ஈடுபட்டு கல்லூரி மாணவர்களுக்கு பிரியாணியை பரிமாறியது இணையத்தில் ட்ரெண்டிங் ஆகிவிட்டது.
இந்த சூழ்நிலையில் நடிகை நயன்தாரா அண்மையில் பேட்டி ஒன்றினை அளித்திருக்கிறார். இந்த பேட்டியில் சினிமா தான் தனக்கு அனைத்தையும் பெற்று தந்ததாக கூறியிருக்கிறார்.
அதாவது சினிமாவில் நடிக்க ஆரம்பித்த பிறகு தான் இவருக்கு அதிகளவு பெயர், பணம், மரியாதை எல்லாம் கிடைத்ததாக மகிழ்ச்சியாக கூறி இருக்கிறார்.
இந்த பதிவு உங்களுக்குப் பிடித்திருந்தால் மறக்காமல் வண்ணத்திரை பக்கத்திற்கு உங்கள் மேலான ஆதரவை கொடுத்து உங்கள் நண்பர்களுக்கும் ஷேர் செய்யுங்கள்.