தல அஜித்தா இப்படி சொன்னாரு..? நம்பவே முடியலையே.? - நாடோடி பட நடிகை சொன்ன தகவல்..!

 

தமிழ் சினிமாவில் எந்த ஒரு பின்னணியும் இல்லாமல் தானாகவே முயற்சி செய்து தன் உழைப்பால் உச்சத்தை தொட்டிருக்கும் மதிப்பு மிக்க நடிகர் தான் தல அஜித். பொதுவாகவே இவர் செய்யக்கூடிய நல்ல விஷயங்கள் அதிக அளவு வெளியில் தெரியாமல் இருக்கிறது. 

இதற்குக் காரணம் இவர் எந்த விதத்திலும் தனக்கு என ஒரு விளம்பரத்தையும் விரும்பவில்லை என்பது தான். அதற்கு உதாரணமாக இவர் சொந்தமாக தனது அம்மாவின் பெயரில் ஒரு அறக்கட்டளையை நிறுவி அதன் மூலம் பல உதவிகளை செய்து வருவது சமீபத்தில் தான் தெரியவந்தது. 

அது மட்டும் அல்லாமல் தன் வீட்டில் வேலை பார்க்கும் பணியாட்களுக்கு கூட சொந்தமாக வீடு கட்டிக் கொடுத்திருப்பதாக அங்கு வேலை செய்த பணியாட்களே கூறியிருக்கிறார்கள். இப்படி அமைதியாக பல நல்ல செயல்களை செய்து வரும் அஜித் பற்றி நாடோடி பட புகழ் அபிநயா சில விஷயங்களை பகிர்ந்து இருக்கிறார்.

அபிநயாவால் பேசவும் கேட்கவும் முடியாது. எனினும் அவருக்கு மிகச் சிறப்பான நடிப்பு திறமை உள்ளதை படங்களில் வெளிப்படுத்தி இருக்கிறார். மேலும் அபிநயா அஜித் நடித்த வீரம் திரைப்படத்தில் பூங்கோதை என்ற கதாபாத்திரத்தை ஏற்று சிறப்பான முறையில் நடித்திருக்கிறார். 

அந்த படத்தின் ஷூட்டிங்கில் அபிநயா, தன் தந்தையுடன் கேரவனில் அமர்ந்திருக்கிறார். அப்போது தல அஜித் கேரவன் அருகில் இருந்து உள்ளே வரலாமா? என்று கேட்டு விட்டு கேரவனுக்குள் சென்று இருக்கிறார். அப்போது அவர் அபிநயாவை பார்த்து ஹாய் நான் அஜித்குமார் என்று தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டார். 

அதுமட்டுமல்லாமல் அபிநயாவிற்கு ஏதேனும் இஸ்யூஸ் இருந்தால் என்னிடம் சொல்லுங்கள். நான் பார்த்துக் கொள்கிறேன் என்று தானாகவே முன் வந்து அபிநயாவிற்கு உதவி செய்ய நினைத்ததைப் பற்றி அவரது தந்தை ஆச்சரியமாக பார்த்திருக்கிறார். 

மேலும் படத்தில் அபிநயா சீன் இல்லை என்றாலும் அபி எங்கே என்று கேட்டு தன் அருகில் அமர வைத்து பேசுவாராம். சினிமாவில் நல்ல இடத்தில் இருக்கும் ஒரு நடிகராக இவர் என்று எண்ணிப் பார்க்கும் போது அபிநயாவின் தந்தைக்கும் அவருக்கும் பிரமிப்பாக இருந்தது என அவரது தந்தை கூறியிருக்கிறார். 

இதுபோல நல்ல குணங்களோடு இருக்கும் நடிகர்களால் சமுதாயத்தில் பல மாற்றங்கள் ஏற்படும் என்பதில் எள்ளளவும் சந்தேகம் இல்லை.