என்னோட புருஷனுக்கு.. நானே வரன் பாத்தேன்.. கொடுமை பகிர்ந்த பிரபல நடிகை..!

 

தமிழ் திரையுலக இயக்குனர் இமயம் என்று அழைக்கப்பட்ட இயக்குனர் கே பாலச்சந்தர் பற்றி உங்களுக்கு நினைவில் இருக்கலாம். இவரது படங்கள் அனைத்தும் பெண்களுக்கு சப்போர்ட் செய்யக்கூடிய வகையில் இருக்கும். அதுவும் இல்லாமல் பாரதியின் புதுமைப் பெண்ணை அவர் படங்களில் நடமாட விடுவார். 

அது மட்டுமா? கே பாலச்சந்தரின் அறிமுகத்தில் நடிக்கக்கூடிய நடிகைகள் மிகச் சிறப்பான முறையில் திரை உலகில் வலம் வருவதோடு மட்டுமல்லாமல் பல விருதுகளுக்கும் சொந்தக்காரர்களாக மாறிவிடுவார்கள். அந்த அளவு திறமையான நடிகைகளை தேர்வு செய்து நடிக்க வைப்பதில் இயக்குனர் இமயத்திற்கு இணை எவரும் இல்லை என கூறலாம்.

அப்படித்தான் இயக்குனர் பாலச்சந்தரின் மூலம் அறிமுகம் செய்யப்பட்ட நடிகை விஜி சந்திரசேகர். இவர் தமிழ் திரைப்படங்களில் பாரதிராஜா, மணிரத்தினம் படங்களிலும் நடித்திருக்கிறார். அண்மையில் ஆரோகணம், மதயானை கூட்டம், வெற்றிவேல் போன்ற திரைப்படங்களில் நடித்து தனது அசாத்திய நடிப்புத் திறனை வெளிப்படுத்தியவர். 

தமிழ் மொழி மட்டுமல்லாமல் தெலுங்கு, மலையாளம், கன்னடம் என தென்னிந்திய மொழிகளில் நடித்தவர். அன்று முன்னணி நடிகர்களாக திகழ்ந்த ரஜினி, கமல், சத்யராஜ், பிரபு முதல் இன்று முன்னணி நடிகர்களாக இருக்கும் சூர்யா, கார்த்தி, தனுஷ், விஜய் சேதுபதி என பல நடிகர்களோடு இணைந்து நடித்திருக்க கூடிய விஜி தனக்கு என்று ஏராளமான ரசிகர்களை பெற்றிருக்கிறார். 

ஆரம்ப நாட்களில் இவருக்கு நடிப்பில் சுத்தமாக இன்ட்ரஸ்ட் இல்லை. ஏனென்றால் படிப்பு தான் முக்கியம் என்று கருதி இருக்கிறார். இதனை அடுத்து இசையில் ஆர்வம் கொண்ட இவர் வீணையும் கற்றுக் கொண்டிருக்கிறார். எதேர்ச்சியாகத்தான் நடிக்கக்கூடிய வாய்ப்பு வந்து சேர்ந்தது. அதுவும் தில்லு முல்லு படத்தில்தான் இவர் முதலில் அறிமுகம் செய்யப்பட்டார். 

நடிப்பு ஒரு பக்கம் இருந்த போதும் பெங்களூருவில் சட்டம் படித்து முடித்த இவர் தனது ஆரம்ப காலத்தில் நடந்த சில சுவாரசியங்களை பகிர்ந்திருக்கிறார். அந்த வகையில் இவர்களது திருமணம் காதல் திருமணமா? என்று கேட்ட ஒரு பேட்டியில் இல்லை அக்கா தான் எனக்கு திருமணம் செய்து வைத்தார். 

மேலும் நான் திருமணம் செய்து கொண்ட எனது கணவரோடு எனக்கு கிட்டத்தட்ட எட்டு வருஷங்களாக பழக்கம் உள்ளது. இவ்வளவு ஏன் என் கணவருக்கு நானே பெண் பார்த்து இருக்கிறேன். 

எனினும் அவருக்கு தக்க வரன் அமையவில்லை. இந்த சூழ்நிலையில் திடீர் என்று எங்கள் இருவருக்கும் திருமண பந்தத்தை என் அக்கா ஏற்படுத்தினார். 
இதனை அடுத்து யாருக்கு யார் என்று ஆண்டவன் எழுதி வைத்திருக்கிறார் என்பது எனக்கு புரிந்தது என கூறினார். 

அடுத்து வடிவேலு உடன் இணைந்து காமெடி படத்தில் நடித்த சமயத்தில் தொடர்ந்து 100 படங்களுக்கு மேல் வடிவேலு உடன் இணைந்து நடிக்க வாய்ப்புகள் வந்தது எனினும் வேண்டாம் என்று மறுத்து விட்டதாக கூறியிருக்கிறார். 

விஜி திரைப்படங்கள் மட்டுமல்லாமல் பந்தம், ரேவதி, ஜாதிமல்லி, குடும்பம் ஒரு கோயில், அலைகள், அண்ணாமலை, கோலங்கள, பெண், அழகி, சந்திரகுமாரி போன்ற சீரியல்களிலும் நடித்துவர். மேலும் தன் கணவருக்கு தானே வரன் பார்த்த விஷயத்தை கூறி ரசிகர்களின் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி விட்டார்.