“கையில் பாட்டிலுடன் திருமண நாளை கொண்டாடிய ஹன்சிகா.!! “ - கலாய்க்கும் நெட்டிசன்கள்..!

 


டார்லிங் டம்பக்கு, டார்லிங் டம்பக்கு… என்ற பாடலின் மூலம் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்த ஹன்சிகா மோத்வானி ரசிகர்களால் சின்ன குஷ்பூ என்று அன்போடு அழைக்கப்பட கூடியவர். இவர் தமிழில் முன்னணி நடிகர்களாக திகழும் பலரோடும் இணைந்து நடித்திருக்கிறார். 

மேலும் திடீர் என்று உடல் எடையை குறைத்து ஸ்லிம்மாகி காட்சி அளித்த இவர் கடந்த வருடம் சோஹைல் கத்தூரியா என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களது நிச்சயதார்த்தமானது பாரிஸில் நடந்த நிலையில் திருமணம் ஆனது ஜெய்ப்பூரில் இருக்கக்கூடிய மிக பிரம்மாண்டமான அரண்மனையில் நடைபெற்றது.

ஏற்கனவே சோஹைல் திருமணம் ஆகி விவாகரத்து செய்தவர். இவர் ஹன்சிகா மோத்வானியை இரண்டாவது மனைவியாக திருமணம் செய்து கொள்ள போவதை அறிந்து கொண்ட நெட்டிசன்கள் நக்கலாக கிண்டல் செய்ததோடு இவரின் முதல் மனைவி ஹன்சிகா மோத்வானியின் தோழி என்பது கடுமையான அதிர்ச்சியை ஏற்படுத்தியது. 

பல சர்ச்சைகள் எழுந்த நிலையில் இவர் தனது திருமண வீடியோவில் அதற்கான பதிலடியை தந்தது உங்களுக்கு நினைவில் இருக்கலாம். இதனை அடுத்து தற்போது அவர் வீடியோ ஒன்றை வெளியிட்டு ரசிகர்களை திணற வைத்திருக்கிறார். இந்த வீடியோவானது முதல் திருமண நாள் அன்று எடுக்கப்பட்டுள்ளது. 


இந்த வீடியோவில் இவர் கணவருக்கு சர்ப்ரைஸ் கொடுத்திருக்கிறார். இவர் கையாலேயே எழுதிய ஐந்து கடிதங்களை ஹன்சிகா கணவரிடம் கொடுத்ததோடு மட்டுமல்லாமல் கேக் வெட்டி இவர்களது திருமண நாளை கொண்டாடினார்கள். 

அதுமட்டுமல்லாமல் திருமண நாளன்று கேக் வெட்டி கொண்டாடிய சமயத்தில் ஹன்சிகாவின் கையில் champagne பாட்டில் உடன் கொண்டாடிய வீடியோ தான் தற்போது இணையத்தை கலக்கி வருகிறது. நீங்களும் இந்த வீடியோவை பார்த்தால் உங்களுக்கு நிச்சயமாக பிடிக்கும். அந்த வீடியோவிற்கு உங்களது லைக்களை போடாமல் செல்ல மாட்டீர்கள்.