இது.. மாடர்ன் பெண்களுக்கு தெரியவில்லை..? - கற்பு பற்றி கருத்து சொன்ன பூனைக்கண் புவனேஸ்வரி..!

 


தெலுங்கு மற்றும் தமிழ் திரைப்படங்களில் ஆரம்ப நாட்களில் நடித்த பூனைக்கண் புவனேஸ்வரி பற்றி உங்களுக்கு நினைவில் இருக்கலாம். இவர் நடித்த வேடங்கள் முழுவதுமே கவர்ச்சிகரமாகவும், காமெடியாகவும் இருக்கும். அந்த வகையில் இவர் நடித்த திரைப்படங்களில் பிரியமானவளே, ரிஷி, எனவோ பிடிச்சிருக்கு, குண்டக்க மண்டக்க உள்ளிட்ட படங்களில் நடித்து ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார். 

இவர் நடித்த பெரும்பாலான கேரக்டர்கள் விலை மாது கேரக்டராக இருக்கும். இன்னும் சொல்லப்போனால் இவர் இயக்குனர் சங்கர் இயக்கிய பாய்ஸ் படத்தில் விலை மாதுவாக நடித்து அனைவரையும் கவர்ந்திருப்பார். இவர் தமிழில் கடைசியாக நடித்த திரைப்படம் தலைநகரம். 

இதனை அடுத்து இவர் தெலுங்கு சினிமாவில் மட்டுமே நடித்து வந்தார். சினிமா துறையில் இருந்து விலக காரணம் என்னவென்றால் இவர் மீது விபச்சார வழக்கினை போலீசார் பதிவு செய்தது. அத்தோடு இந்த வழக்கானது திட்டமிட்ட சதி எனவும், தன் மீது தவறான குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது என்பதை நீதிமன்றத்தில் வாதாடி அந்த வழக்கில் இருந்து வெளி வந்தார். 

அடுத்து இவர் பற்றி எந்த விதமான செய்திகளையும் நாம் கேட்க முடியவில்லை. இந்நிலையில் திடீரென சீரியலில் வில்லியாக நடிக்க ஆரம்பித்தார். இதனை அடுத்து இவர் சித்தி சீரியலில் நடித்த பின்பு சொர்க்கம், ராஜராஜேஸ்வரி, தெற்கத்திப் பொண்ணு, சந்திரலேகா, ஒரு கை ஓசை, பாசமலர் போன்ற சீரியல்களில் வில்லியாக நடித்து இல்லத்தரசிகளின் மனதில் இடம் பிடித்தார்.

இவர் பல வருடங்களுக்கு முன்பு ஊடகத்திற்கு கொடுத்த பேட்டி ஒன்று தற்போது பரபரப்பாக ரசிகர்களின் மத்தியில் பேசும் பொருளாக மாறிவிட்டது. அந்த பேட்டியில் இவர் கற்பு என்பது புனிதமானது என்றும் இதை மார்டன் உலகில் இருக்கும் பெண்கள் சரியாக புரிந்து கொள்ளாமல் நடப்பதாகவும் கூறியிருக்கிறார். 

மேலும் தன்னை பற்றி தவறுதலான செய்திகளை வெளியிட்டு அவரது மனதை பாதிக்கும்படி பலரும் நடந்து கொண்டதன் காரணத்தால் மன உளைச்சல் ஏற்பட்டதாகவும் கூறியிருக்கிறார். இதனை அடுத்து தான் தமிழ் படங்களில் நடிப்பதில்லை என்பதை அவர் பதிவு செய்து இருக்கிறார். 

தெலுங்கு படங்களில் மட்டும் நடித்து வரும் இவருக்கு சரோஜாதேவியை மிகவும் பிடிக்குமாம். அவருக்கு கிடைத்த கதாபாத்திரத்தை போல் இவருக்கு அமையவில்லை என்று வருத்தப்பட்டு இருக்கிறார். அது மட்டுமல்லாமல் பலருக்கும் தான் உதவி செய்து வருவதாகவும் கூறி இருக்கிறார். 

சினிமாவை பொறுத்தவரை திறமை இருந்தால் மட்டுமே நிலைத்து நிற்க முடியும். எனவே யாரையும் நம்பி சினிமா துறைக்கு வரக்கூடாது என்று கூறிய இவர் தன் சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளால் மிகவும் மனம் வருந்தியதாகவும், ஆதலால் பல வகைகளில் கஷ்டத்தை அனுபவித்ததாகவும் புவனேஸ்வரி பேசியிருக்கிறார்.

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் மறக்காமல் வண்ணத்திரை பக்கத்திற்கு உங்களது மேலான ஆதரவை கொடுத்து உங்களது நண்பர்களுக்கும் ஷேர் செய்யுங்கள்.