“வீரப்பன்” ரஜினிக்கு கொடுத்த பட்டம்..!! - ரஜினிக்கு தெரியாத ரகசியத்தை சொன்ன நக்கீரன் கோபாலன்..!

 

தமிழ் திரை உலகில் என்றுமே தனக்கு என்று ஒரு சிம்மாசனத்தை போட்டு அந்த சிம்மாசனத்தை யாருமே பிடித்திடாத வகையில் இன்று வரை நின்று நிலைத்து தன் பக்கமே வைத்திருக்கும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தனக்கு என்று ஒரு ஸ்டைலில் திரைப்படங்களில் நடித்து ஏராளமான ரசிகர்களுக்கு சொந்தக்காரர் ஆனார். 

இவர் தற்போது தன்னுடைய 73 ஆவது பிறந்தநாள் விழாவை கொண்டாடி இருக்கிறார். இதனை அடுத்து திரையுலக பிரபலங்கள் மட்டுமல்லாமல் ரசிகர்களும் இவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து இருக்கிறார்கள்.

இந்த சூழ்நிலையில் இவரை பற்றிய வீடியோ ஒன்று தற்போது வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது. மேலும் இந்த வீடியோவில் ரஜினி தான் அடுத்த எம்ஜிஆர் என்று கடத்தல் மன்னன் வீரப்பன் கூறிய பேச்சானது தற்போது பிரபலமாக மாறிவிட்டது.

இவர் எப்போது இதை சொன்னார் என்பது ரஜினிக்கு கூட தெரியாது. கன்னட நடிகர் ராஜ்குமாரை வீரப்பன் கடத்தி சென்ற போது அவரை காப்பாற்ற வேண்டும் என பல வகைகளில் ரஜினி முயற்சி செய்தார். அந்த சமயத்தில் தான் வீரப்பன் கடுமையாக ரஜினியை பேசி விமர்சனம் செய்திருப்பார். 

நக்கீரன் கோபால் வீரப்பனை சந்தித்தபோது நடந்த உரையாடல்களின் போது எம்ஜிஆரை போல யாரும் இல்லை. இனி அவர் இடத்திற்கு வரக்கூடிய தகுதி ரஜினிக்கு மட்டும் தான் உள்ளது என வீரப்பன் கூறியிருக்கிறார்.

அதுமட்டுமல்லாமல் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை மதிப்பு கொடுக்கக்கூடிய நல்ல பண்பாளர் என்று வீரப்பன் கருத்துக்களை கூறியிருக்கிறார். 

இந்நிலையில் கடவுள் மீது அதீத பற்று இருக்கக்கூடிய இவர் வருங்கால அரசியலில் அது அவரை வெற்றி பெற வைக்கும் என்று கூறியதோடு மட்டுமல்லாமல் ரஜினி பற்றிய வீரப்பன், எம்ஜிஆர் கம்பேர் பண்ணியது தற்போது பரவலாக ரசிகர்களின் மத்தியில் பேசப்படுவதோடு இன்று வரை வெளி வராத அந்த வீடியோ தற்போது வெளி வந்து ரசிகர்களின் மத்தியில் பெரும் பரபரப்பையும் சந்தோஷத்தையும் ஏற்படுத்தி விட்டது.