மேலே கொடுக்கப்பட்டு இருக்கக்கூடிய போட்டோவில் இருக்கும் நடிகை யார் என்று உங்களுக்கு தெரிகிறதா?. பார்க்கும்போதே மனதில் நிலைத்து நிற்கக்கூடிய வகையில் போண்டா கண்ணோடு க்யூட்டாக இருக்கும் இந்தப் பெண் நடிகை யார் என்பதை இந்த பதிவில் படித்து தெரிந்து கொள்ளலாம்.
இன்று வரை இந்த நடிகை எவர்கிரீன் நடிகையாக, வளர்ந்து வரும் நடிகைகளுக்கு சவால் விடக்கூடிய வகையில் வயதான போதும் அழகும் ஸ்டைலும் அப்படியே இருக்கிற நடிகைகளில் ஒருவராக திகழ்கிறார்.
இவர் நடித்த திரைப்படங்கள் அனைத்துமே கூடுதல் கவர்ச்சி எதையும் காட்டாமல் மிக நேர்த்தியான முறையில் படு சுட்டித்தனத்தை வெளியிட்டு நடித்தவர்.
இதனை அடுத்து அம்மா கேரக்டரில் இப்படியும் செய்யலாமா? என்று கேட்கக் கூடிய வகையில் தனது அபார நடிப்பை ஜெயம் ரவி நடித்த படத்தில் வெளிப்படுத்தியவர்.
தமிழ் படங்கள் மட்டுமல்லாமல் மலையாளம், தெலுங்கு என தென்னிந்திய மொழிகளில் பல முன்னணி நடிகர்களோடு இணைந்து நடித்திருக்கும் இவர் ரசிகர்களால் அதிகளவு விரும்பப்பட்ட நடிகையாகவும் இருந்திருக்கிறார்.
இந்த நடிகையின் இந்த புகைப்படம் தான் தமிழ் சினிமா புகைப்படங்களை விட தற்போது அதிகளவு வலைத்தளங்களில் பகிரப்பட்டு ட்ரெண்டிங் ஆகி வருகிறது. அப்படி என்ன இந்த புகைப்படத்தில் உள்ளது என்று நீங்கள் நினைக்கலாம்.
இந்த சிறு வயது சிறுமியின் புகைப்படம் தான் இதற்கு காரணம்.
இந்தப் புகைப்படத்தில் தனது அம்மாவோடு இருக்கும் சிறுமி யார் என அறிந்து கொள்ள ஆவலாக அனைவரும் இணைய பக்கங்களை தொடர்ந்து பார்த்து வருவதால் அதிகப்படியாக பார்க்கப்பட்ட புகைப்படங்களில் ஒன்றாகிவிட்டது.
மேலும் நான் கூறிய இந்த நடிகை இப்போது தமிழகத்தில் இல்லை. இவருக்கு திருமணம் ஆகி இரண்டு பெண் குழந்தைகள் உள்ள நிலையில் இவர் மும்பையில் செட்டில் ஆகிவிட்டார்.
திருமணத்திற்கு பிறகும் இவர் அடிக்கடி சினிமாவில் குணச்சித்திர கேரக்டர் ரோல்களை செய்து வருகிறார்.
மேலும் இவர் எப்போதும் எண்பதுகளில் பிரபலங்களாய் இருந்தவர் என்ற காரணத்தால் ரீயூனின்களில் கலந்து கொள்ளக்கூடிய தன்மை கொண்டவர்.
இப்போது இவர் யார் என்பதை நீங்கள் ஏறக்குறைய கண்டுபிடித்து இருப்பீர்கள். சரி தான் நீங்கள் நினைப்பது போல என்றும் இளமையாக இருக்கும் எவர்கிரீன் நடிகை நதியாவின் சிறு வயது போட்டோ இது தான்.