இவரால எல்லாமே நாசமாய் போச்சு..! - லட்சக்கணக்கில் சம்பாதித்து நோ யூஸ்..! புலம்பிய நீலிமா ராணி..!

 

இன்று வெள்ளித்திரை நடிகைகளுக்கு எந்த அளவு மதிப்பும் மரியாதையும் இருக்கிறதோ, அதே அளவு சின்னத்திரை நடிகைகளுக்கும் மதிப்பும் மரியாதையும் மக்கள் மத்தியில் கொட்டி கிடைக்கிறது. 

அந்த வகையில் தேவர் மகன் என்ற தமிழ் சினிமாவில் அதுவும் உலகநாயகன் கமலஹாசன் நடித்த திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகம் ஆனவர் தான் நீலிமா ராணி. 

குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான இவர், வளர்ந்த பிறகு திரைப்படங்களில் பல குணச்சித்திர வேடங்களில் நடித்திருக்கிறார். குறிப்பாக அக்கா, அண்ணி, தோழி போன்ற சின்ன, சின்ன ரோல்களில் நடித்து ரசிகர்களின் மனதில் இடம் பிடித்துக் கொண்டார். 

 சினிமாவில் நடிப்பதோடு நின்று விடாமல் இவர் சின்ன திரைகளில் முன்னணி நடிகையாக வலம் வந்த இவர் கடந்த ஆண்டுதான் இரண்டாவது குழந்தையையும் பெற்றுக் கொண்டார். 

இந்நிலையில் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் நீலிமா ராணி தனது வாழ்க்கையில் நடந்த சில அதிர்ச்சிகரமான சம்பவங்களை பற்றி மிக உருக்கமாக பேசியிருக்கிறார். 

அந்த பேச்சில் இவர் மாதா மாதம் ஒரு லட்சம் ரூபாய் வரை சீரியல்களில் நடித்து சம்பாதித்ததாகவும், அந்த பணத்தை அவர் அப்படியே அந்த சமயத்தில் அவர் அப்பாவிடம் கொடுத்து விடுவாராம். ஆனால் அப்படி கொடுக்கப்பட்ட பணம் முழுவதையும் அவர் அப்பா சூதாட்டத்தில் வைத்து இழந்துவிட்டார். 

ஒரு காலகட்டத்தில் கையில் எதுவுமே இல்லாத நிலையில் நடு தெருவிற்கு வந்த நீலிமா தான் செய்த செயலை நினைத்து இன்று வரை வருத்தப்பட்டு இருக்கிறார். 

எனினும் மனம் தளராத நீலிமா ராணி வாடகைக்கு ஒரு வீட்டில் குடியேறி வைராக்கியத்துடன் சம்பாதித்து வாடகை வீட்டை தற்போது விலைக்கு வாங்கியதாக கூறியிருக்கிறார்.

அப்பாவை நம்பி எல்லாம் நாசமாய் போச்சு என்று அவர் கண்ணீர் மல்க தெரிவித்தது ரசிகர்கள் அனைவரையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. இந்தப் பதிவு உங்களுக்குப் பிடித்திருந்தால் மறக்காமல் வண்ணத்திரை பக்கத்திற்கு லைக்குகளை போட்டு உங்கள் நண்பர்களுக்கும் ஷேர் செய்யுங்கள்.