“நீங்க நினைக்கிற மாதிரி நான் அந்த மாதிரி பெண் கிடையாது..!” - உண்மையை உளறிய பிரியா பவானி சங்கர்..!

 

சின்னத்திரையில் இருந்து வெள்ளி திரைக்கு சென்ற நடிகைகள் அதிகளவு இருக்கிறார்கள் உதாரணமாக வாணி போஜனை நாம் சொல்லலாம். இவரை போலவே சின்னத்திரையில் இருந்து வெள்ளி திரைக்குச் சென்ற பிரியா பவானி சங்கர் ஆரம்பத்தில் கல்யாண முதல் காதல் வரை என்ற சீரியல் தனது அற்புதமான நடிப்புத் திறமையை வெளிப்படுத்தினார். 

இதனை அடுத்து இவர் மேயாத மான் என்ற திரைப்படத்தில் தனது அற்புதமான நடிப்புத் திறனை வெளிப்படுத்த அடுத்து பல பட வாய்ப்புகள் இவரை தேடி வந்தது. அந்த வகையில் இவர் இந்தியன் 2, டிமாட்டி காலனி 2 போன்ற படங்களில் நடித்திருக்கிறார். 

மேலும் இவர் நேரம் கிடைக்கும்போதெல்லாம் தன்னுடைய நீண்ட நாள் காதலரான ராஜ்வேலோடு சேர்ந்து வெளிநாட்டுக்கு அவுட்டிங் செல்வது, அங்கு ரொமான்டிக்காக காதலனுடன் நேரத்தை செலவிடுவார். மேலும் இவர் சமூக வலைத்தளங்களில் அவ்வப்போது பேட்டிகளை அளித்து வருகிறார். 

அந்த வகையில் தற்போது அளித்த பேட்டி ஒன்றில் நான் ஸ்மார்ட்டான பெண், சென்சிடிவான பெண், மிகவும் அறிவான பெண் என்று கூறி சில நிமிடங்களிலேயே தான் அறிவான பெண் அல்ல என்பதை கூறிவிட்டார். 

மேலும் இவர் தனக்கு எது சரி என்று மனதும், மூளையும் சொல்கிறதோ!! அதன் படி தான் முடிவுகளை செய்து வருகிறாராம். எந்த ஒரு முடிவையும் எடுத்துவிட்டு ஏன் இதை செய்தோம் முட்டாள்தனமாக எடுத்து விட்டோம் என்று சில சமயங்களில் வருத்தப்பட்ட காரணத்தால் இவர் தன்னை அறிவான பெண் என்று சொல்லத் தயங்குகிறார். 

இவர் தன்னை ஓர் அறிவான பெண் என்று கூறுவதை விட பிரச்சனைகளை தீர்க்க முயற்சி செய்யக் கூடிய பெண் என்று சொல்வது தான் சரியாக இருக்கும் என பிரியா பவானி சங்கர் கூறியிருக்கிறார். 

இதனை அடுத்து இவரது ரசிகர்கள் அனைவரும் நீங்கள் அறிவான பெண்தான் அதை ஏன் இப்படி நீங்கள் மறைமுகமாக கூற வேண்டும். நேரடியாகவே சொல்லி விடலாமே என்ற கேள்வியை முன் வைத்திருக்கிறார்கள். 

இதற்கு உரிய பதிலை பிரியா பவானி சங்கர் விரைவில் தருவார் என்ற நம்பிக்கையோடு ஒவ்வொரு ரசிகர்களும் காத்திருக்கிறார்கள். நீங்களும் பிரியா பவானி சங்கரின் கருத்துக்கு உங்கள் பதில் என்ன என்பதை சொல்லலாமே..