“எதுக்கு குத்தனும்.. எதுக்கு எடுக்கணும்..” - காதல் போதையில் ரச்சிதா செய்த வேலை..!

 

சின்னத்திரையில் சீரியல் நடிகையாக வளர்ந்து மக்கள் மத்தியில் தனக்கு என்று ஒரு தனி இடத்தை பிடித்துக் கொண்ட சீரியல் நடிகை ரச்சிதா மகாலட்சுமி பற்றி உங்களுக்கு மிக நன்றாக தெரியும். இவர் தன்னோடு இணைந்து நடித்த சீரியல் நடிகர் தினேஷை காதலித்து 2015 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்கள். 

இதனை அடுத்து இவரது வாழ்க்கை சீரும் சிறப்புமாக போய்க் கொண்டிருந்தது. எனினும் யார் கண் பட்டதோ தெரியவில்லை. தற்போது இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக தனித்தனியாக பிரிந்து வாழ்ந்து வருகிறார்கள். 

மேலும் ரச்சிதா மகாலட்சுமி பிக் பாஸ் சீசன் 4 கலந்து கொண்டு 91 நாட்கள் வரை அந்த வீட்டில் இருந்து விளையாடினார். இதனை அடுத்து இவரது கணவர் தினேஷை கண்டு கொள்ளாமல் நண்பர்களுடன் பழகி அவுட்டிங் போவதும் அங்கு எடுத்த போட்டோக்களை வெளியிடுவதுமாக இருந்து வந்தார். 

மேலும் இவர் தினேஷ் தன்னை டார்ச்சர் செய்து வருவதாக போலீசாரிடம் புகார் அளித்தார். அந்த புகாரை விசாரித்த போலீசார் தினேஷ் தன் மீது தப்பில்லை என்றும் ரச்சிதாவை விவாகரத்துக்கு விண்ணப்பிக்க சொல்லியும் அதற்கான சம்மதத்தை தெரிவித்தார். 


இந்த சூழ்நிலையில் தற்போது பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் வைல்டு கார்டு மூலம் போட்டியாளராக தினேஷ் உள்ளே நுழைந்து இருக்கிறார். அங்கு தன் மனைவி பற்றிய சில கருத்துக்களை பகிர்ந்து இருக்கிறார். 

தற்போது ரச்சிதா வெளியிட்டு இருக்கக்கூடிய வீடியோவை பார்த்து ரசிகர்கள் அனைவரும் அதிர்ச்சி அடைந்திருக்கிறார்கள். இதற்கு காரணம் இவர் கையில் தினேஷின் பெயரை பச்சை குத்தி இருந்தார். தற்போது அந்த இடத்தில் வேறொரு டிசைனில் பச்சை இருப்பதை பார்த்து எல்லாம் முடிந்து விட்டது என்று ரசிகர்கள் கூறியிருக்கிறார்கள். 

இந்நிலையில் இன்ஸ்டாகிராமில் வெளி வந்திருக்கும் வீடியோவில் முன் இருந்த பச்சையை மறைத்து அதன் மேல் வேறொரு பச்சையை பதித்த வீடியோவை வெளியிட்டு இருக்கிறார். 

இதன் மூலம்சூசகமாக இனி மேல் தினேஷுடன் சேர்ந்து வாழப்போவதில்லை என்பதை கூறி விட்டாரா? என்ற ரீதியில் ரசிகர்கள் அவர்களுக்குள் பட்டிமன்றம் போட்டு பேசி வருகிறார்கள்.