“ஜோ - சூர்யா காதலால் கருகிய கார்த்தி காதல்..!” - அட்வைஸ் செய்த ஜெ அம்மாவுக்கு தந்த மரியாதை..!

 


தமிழ் திரை உலகில் நடிகர் சிவகுமாருக்கு என்று ஒரு நல்ல பெயர் உள்ளது. மேலும் இவரது இரண்டு மகன்களும் திரை திரையில் தற்போது சக்கை போடு போடும் நடிகர்களில் ஒருவராக மாறிவிட்டார்கள். 

அந்த வகையில் இவரது இரண்டாவது மகன் கார்த்தி பருத்திவீரன் என்ற திரைப்படத்தில் அறிமுகமாகி அண்மையில் வெளி வந்த பொன்னியின் செல்வன் வரலாற்று படத்தில் வந்திய தேவனாக நடித்து அசத்தியிருந்தார். 

அதுமட்டுமல்லாமல் இவர் திரைத்துறையில் தன் அண்ணன் சூர்யாவின் பெயரையோ அல்லது அப்பா சிவக்குமாரின் பெயரையோ பயன்படுத்தி பிரபலமாகாமல் தன் சொந்த உழைப்பால் உயர்ந்தவர். 

மேலும் இவரது 25-ஆவது படமான ஜப்பான் திரைப்படம் சமீபத்தில் வெளி வந்து கலவை ரீதியான விமர்சனத்தை பெற்றதோடு வசூலில் நஷ்டத்தை உருவாக்கியது. 

கார்த்தியின் சொந்த வாழ்க்கையை பொறுத்தவரை இவரது அண்ணன் ஜோதிகாவை காதலித்து திருமணம் செய்து கொண்டதை, அடுத்து இவரிடம் காதல் கல்யாணம் எல்லாம் கூடாது என்று சிவக்குமார் கூறி இருந்ததாக தெரிகிறது. 

இதனை அடுத்து சூர்யாவின் திருமண பத்திரிக்கையை முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவிற்கு கொடுக்க செல்லும் போது கார்த்தியும் உடன் சென்று இருக்கிறார். அப்போது ஜெயலலிதா அம்மா அண்ணன் தான் காதலித்து திருமணம் செய்து கொண்டார். நீயாவது அம்மா, அப்பா பார்க்கும் பெண்ணை திருமணம் செய்து கொள் என்று கூறி இருக்கிறார். 

அந்த அட்வைஸை கடைப்பிடித்து தான் கார்த்தி அவர்கள் பெற்றோர்கள் பார்த்த பெண்ணை திருமணம் செய்து கொண்டார். எனினும் சில கிசு கிசுக்கள் இவரையும் தமன்னாவையும் இணைத்து வெளி வந்தது அவை எதுவும் உண்மை இல்லை. இது தான் உண்மை என்று கூறக்கூடிய வகையில் கருத்துக்களை பகிர்ந்து இருக்கிறார்கள். 

இந்த நிகழ்வை கார்த்தியின் தந்தையான சிவக்குமார் அண்மை பேட்டியில் தெரிவித்திருக்கிறார். மேலும் ஜெயலலிதா அம்மா கூறிய அறிவுரையை கேட்டு கார்த்தி தான் பார்த்த உறவுக்கார பெண்ணை திருமணம் செய்து கொண்டதை நினைத்து பெருமைப்படுவதாக கூறியிருக்கிறார்.