விஜய் டிவியில் தற்போது நடக்கும் பிக்பாஸ் சீசன் 7 நிகழ்வானது இறுதிக் கட்டத்தை நெருங்கிவரக் கூடிய வேளையில் விஷ்ணு மீது பெண் போட்டியாளர் ஒருவர் குற்றச்சாட்டை வைத்து பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறார்.
உலக நாயகன் தொகுத்து வழங்கும் இந்த நிகழ்ச்சி அக்டோபர் மாதம் 1 ம் தேதி, 18 போட்டியாளர்களோடு துவங்கியது. இந்த போட்டியில் முதல் வாரமே அனன்யா ராவ் மக்களின் வாக்குகளை அடிப்படையாகக் கொண்டு வெளியேற்றப்பட்டார்.
இதனை அடுத்து பல எலிமினேஷங்கள் நடந்து விட்டது. இந்த நிலையில் தான் பிக் பாஸ் நிகழ்ச்சியில், மேலும் 5 போட்டியாளர்களை வைல்டு கார்டு மூலம் உள்ளே அனுப்பி ரசிகர்களின் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தினார்கள்.
தற்போது எந்த போட்டியாளர்களின் மூலம் பிக் பாஸ் வீட்டில் நெருப்பு பற்றி எரிகிறது. மேலும் அந்த நெருப்பில் எண்ணெயை ஊற்றுவது போல அனன்யா ராவ் மற்றும் விஜய் வர்மாவின் என்ட்ரி உள்ளது என கூறலாம்.
ஒவ்வொரு நாளும் பரபரப்பாக சண்டைகளுக்கு பஞ்சம் இல்லாமல் சென்று கொண்டு இருக்கும், இந்த போட்டியில் யார் எந்த நேரத்தில் எப்படி மாறுவார்கள், அவர்களின் சுயரூபம் என்ன என்று தெரியாதபடி நிகழ்வுகள் அடுத்தடுத்த கட்டங்களை நோக்கி நகர்கிறது.
ஏற்கனவே நடந்த பிக் பாஸ் நிகழ்ச்சியில் 60 நாட்களைக் கடந்து விட்டாலே யார் வெற்றியாளர் என்பதை மக்களே கணித்து விடுவார்கள். ஆனால் இந்த சீசன் 7ல் டைட்டில் வின்னர் யார் என்பது புரியாத புதிராக உள்ளது.
இந்நிலையில் டைட்டில் வின்னர் ஆக வாய்ப்பு இருக்ககூடிய விஷ்ணு குறித்து பெண் போட்டியாளரான அனன்யா ராவ் பரபரப்பான குற்றச்சாட்டை விதித்திருக்கிறார். இந்த குற்றச்சாட்டு தான் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.
இதற்குக் காரணம் விஷ்ணு, அனன்யா ராவிடம் ரிலேஷன்ஷிப்பில் இருக்கலாமா? என்று கேட்டதாகவும், அதற்கு அவர் மறுப்பு தெரிவித்து இருப்பதாகவும் கூறிய விஷயம் தான் தற்போது விஸ்வரூபமாக மாறிவிட்டது.
இதனை அடுத்து விஷ்ணு ஒரு ட்ராக் போட்டு அதில் பயணித்து வரக்கூடிய நிலையில் திடீரென அண்டர் பல்டி அடித்தார்.
இதனை அடுத்து அனன்யாவிடம் இப்படி பேசி உள்ளதால் இவர் கேம் விளையாடுவதற்கு தந்திரமாக காய்களை நகர்த்தி வருகிறார் என்று மற்ற போட்டியாளர்கள் கூறி வருகிறார்கள்.