ஸ்ரீதேவி மறைந்து பல வருடங்கள் ஆயிருந்தாலும் என்றும் ரசிகர்களின் மத்தியில் நீங்காமல் வாழ்ந்து வருகிறார். ஸ்ரீதேவி மறைந்த பிறகு அவரை சுற்றி நிறைய சர்ச்சைகளும் எழுந்தது. இந்த நிலையில் தற்போது உலகநாயகன் கமலஹாசன், ஸ்ரீதேவியின் மறைவுக்குப் பிறகு தற்போது ஸ்ரீதேவி பற்றி கூறிய கருத்து சர்ச்சையை கிளப்பியுள்ளது.
ரஜினிகாந்த் மற்றும் கமலஹாசனோடு மாறி மாறி போட்டி போட்டு நடித்த ஸ்ரீதேவி இவர்கள் இருவருக்குமே ஆஸ்தான கதாநாயகியாக திகழ்ந்தவர். அந்த அளவு இருவருக்குமே இவரது கெமிஸ்ட்ரி ஒர்க் அவுட் ஆகும். மேலும் இருவரும் இணைந்து நடித்த படம் எப்போதும் வெற்றி வெற்றி வெற்றியை தான் தந்தது.
இந்த நிலையில் இவர்கள் மூவருமே திரையுலகில் உச்சத்தில் இருந்த சமயத்தில் ஸ்ரீதேவி யாரை திருமணம் செய்து கொள்வார் கமலஹாசனா? அல்லது ரஜினிகாந்தா? என்ற ஒரு போட்டா போட்டியே நடந்து வந்தது.
மேலும் ரஜினி ஸ்ரீதேவியை காதலிப்பதாகவும் ஸ்ரீதேவியோ கமலே காதலிப்பதாகவும் வதந்திகள் அடிக்கடி கிளம்பி ரசிகர்களின் மத்தியில் ஆவலை ஏற்படுத்தும். மேலும் இவர்கள் இருவரும் திருமணம் செய்து கொண்டார்கள். குடும்பம் நடத்தி வருகிறார்கள் என்பது போன்ற கிசுகிசுக்கள் அடிக்கடி வெளிவந்த வண்ணம் இருந்தது.
இதனை அடுத்து ஸ்ரீதேவி பாலிவுட் சென்று திருமணம் செய்யும் வரை இந்த வதந்திகள் விதவிதமாக தென்னிந்திய திரை உலகில் பரவி வந்தது. இது நிமித்தமாக தற்போது கமலிடம் கேள்வி ஒன்று கேட்கப்பட்டது.
அதற்கு கமலஹாசன் அளித்த பதிலில் ஸ்ரீதேவிக்கும் தனக்கும் இடையே உள்ள உறவானது அண்ணன், தங்கை உறவைப் போன்றது. ஆனால் இதை கூறினால் திரை உலகம் ஒத்துக் கொள்ளாது.
எனவே நாங்கள் இருவரும் காதலர்கள் போல காட்டிக் கொண்டாம்.இதனால் எங்கள் படங்களுக்கு எதிர்பார்ப்புகள் அதிகமாக இருக்கும். எனவே எங்களை சுற்றி ஏற்படும் வதந்திகளை பற்றி நாங்கள் கண்டு கொள்ளாமல் அப்படியே விட்டு விட்டோம் சினிமா என்றாலே வியாபாரம் தானே.
இப்படி யாரும் அளிக்காத பதிலை சொல்லி அவர்கள் உண்மையாகவே அண்ணன் தங்கையை போலவா? பழகினார்கள் என்ற கருத்தானது தற்போது ரசிகர்களின் மத்தியில் பேசும் பொருளாகி விட்டது.