1980 மற்றும் 90களில் இளைஞர்கள் விரும்பும் கனவு கன்னியாக நடிப்பில் கொடி கட்டி பறந்த நடிகைகளில் ஒருவர் குஷ்பூ. இவர் தமிழில் நடித்த சின்னத்தம்பி திரைப்படம் 100 நாட்களுக்கு மேல் ஓடி சாதனை புரிந்தது.
மேலும் இவர் நடிப்பில் வெளி வந்த வருஷங்கள் 16 படத்தில் தனது நேர்த்தியான நடிப்பை வெளிப்படுத்தி இருப்பார். திரைப்படத்தில் நடிக்கும் போதே பல கிசுகிசுக்கள் வெளி வந்த நிலையிலும், திருமணத்திற்கு பிறகும் இவர் நடிப்பதோடு மட்டுமல்லாமல் தயாரிப்பு, டைரக்ஷன் போன்றவற்றிலும் கவனத்தை செலுத்தி வருகிறார்.
அதுமட்டுமல்லாமல் அரசியலிலும் தன்னை ஈடுபடுத்திக் கொண்டிருக்கும் குஷ்பூ சமீப காலமாக சில சர்ச்சைகளில் சிக்கி இருக்கிறார். அந்த வகையில் இவர் தமிழ்நாட்டுப் பெண்களின் கற்பு பற்றி பேசி இருந்ததை பயில்வான் ரங்கநாதன் விமர்சனம் செய்திருக்கிறார்.
இந்த விமர்சனத்தில் கற்பு பற்றி பேச குஷ்புவுக்கு எந்த வகையில் தகுதி இருக்கிறது என்ற கேள்வியை எழுப்பியதோடு, அவர் கூறிய கருத்தில் பெண்கள் பலரும் தற்போது திருமணம் செய்யாத நிலையில் உடல் உறவில் ஈடுபடுகிறார்கள்.
அதனால் தான் ரேஷன் கடையில் ஆணுறைகள் விற்பனை செய்யப்படுகிறது என பேசினார்.
மேலும் திருமணத்துக்கு முன்னதாகவே உடலுறவு வைத்திருக்கும் பெண்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக குஷ்பூ பேசி இருக்கக்கூடிய நிலையில் இந்த பேச்சானது தமிழ்நாடு பெண்கள் மத்தியில் பேச கூடாத பேச்சு என்று பயில்வான் கூறினார்.
அதுமட்டுமல்லாமல் ஒரு சினிமா நடிகை கற்பு பற்றி பேச அவசியம் இல்லை. வீணாக இதில் குஷ்பூ நுழைந்து சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறார். இந்த கருத்து குறித்து கண்டிப்பாக குஷ்பூ மன்னிப்பு கேட்க வேண்டும் அல்லது வருத்தமாவது தெரிவிக்க வேண்டும்.
இவர் படங்களில் நடிக்கும் காலகட்டத்தில் கல்யாணத்துக்கு முன்பாகவே உடலுறவை மற்ற நடிகர்களோடு வைத்திருந்தார் என்பது அனைவருக்கும் அப்பட்டமாக தெரியக்கூடிய நிலையில் இது போன்ற விஷயங்கள் அவருக்கு சாதாரணமாக இருக்கலாம்.
இது மட்டுமல்லாமல் அவரிடம் யாராவது திருமணத்திற்கு முன்பு உடலுறவு வைத்திருந்தீர்களா? என்ற கேள்வியை கேட்டால் சும்மா இருப்பாரா?. இவரை போலவே தமிழ்நாட்டில் இருக்கும் எல்லா பெண்களும் இருப்பார்கள் என்று இவர் நினைப்பது மிகவும் தவறு என்று பல வகைகளில் குஷ்புவை தாக்கித் பேசியிருக்கிறார்.
பயில்வானின் இந்த பேச்சு தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. இந்த கருத்தை அனைவரும் கேட்டு வருகிறார்கள். மேலும் ஒவ்வொருவரும் அவர்களுக்கு உரிய விமர்சனங்களையும் கூறி இருக்கிறார்கள்.