“கோடி கோடியாய் பணமிருந்தும் சொந்த தம்பிக்கு உதவி செய்யாத அம்பிகா மற்றும் ராதா..!” - இறுதியில் நடந்த கூத்து..!

 

அக்கா மடியில் அரிசி இருந்தால், தங்கச்சி மடியில் தவிடாவது இருக்க வேண்டும் என்ற பழமொழியை நீங்கள் கேள்விப்பட்டிருக்கலாம். அந்த பழமொழியை உறுதி செய்யக்கூடிய வகையில் தற்போது 90-களில் தமிழ் சினிமாவை கலக்கி ரசிகர்களின் மனதில் நீங்காத இடம் பிடித்த சூப்பர் ஸ்டார் சகோதரிகளான ராதா மற்றும் அம்பிகாவின் செயல் அமைந்துள்ளது . 

தமிழ் திரைப்படம் மட்டுமல்லாமல் தெலுங்கு, மலையாளம், ஹிந்தி, கன்னடம் என பல மொழிகளிலும் இவர்கள் தனது அபார நடிப்புத் திறனை காட்டி முன்னணி நடிகர்களோடு நடித்தது மட்டுமல்லாமல் இந்த துறையில் இவர்கள் அதிக அளவு சம்பாதித்த பணத்தை சொத்துக்களாக மாற்றி இருக்கிறார்கள். 

இந்நிலையில் அண்மையில் ராதாவின் மகள் கார்த்திகாவின் திருமணம் உலகமே மெச்சும் அளவு சீரும் சிறப்புமாக தனது மகளை தங்கத்தால் இழைத்திருந்தார் எனக் கூறக்கூடிய வகையில் பிரமாண்டமான முறையில் பல பிரபலங்கள் கலந்து கொண்ட திருமண விழாவாக இருந்தது. 

இவர்களுக்கு சென்னையில் எம் ஜி ஆர் கிப்டாக கொடுத்த 25 ஏக்கர் நிலத்தில் ஏ ஆர் எஸ் கார்டன் என்ற பெயரில் ஸ்டூடியோ ஒன்றை நடத்தி வந்திருக்கிறார்கள். இந்த ஸ்டுடியோ குறைந்த வாடகையில் சின்னத்திரை சீரியல்களை படப்பிடிக்க உதவக்கூடிய வகையில் அங்கு படப்பிடிப்புகள் நடந்த வண்ணம் இருந்தது. 

இந்த சூழ்நிலையில் தென்னிந்திய திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தின் முக்கிய பொறுப்பில் இருக்கும் தயாரிப்பாளர் பிரசாத் என்பவரிடம் அம்பிகா மற்றும் ராதாவின் தம்பி அர்ஜுன் 25 லட்சம் கடன் வாங்கிய நிலையில் இருந்த கடனில் 19 லட்சத்தை கட்டிவிட்டார்.மீதி கடன் ஆறு லட்சம் உள்ளது. 

இதை திருப்பி செலுத்த முடியாத நிலையில் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இந்த விவகரத்திற்கு தீர்வு காண பெப்ஸி மற்றும் தயாரிப்பாளர் சங்கத்தை அணுகிய தயாரிப்பாளர் பிரசாந்துக்கு தீர்ப்பு அளிக்கக்கூடிய வகையில் சங்கமானது அந்த ஸ்டுடியோவில் படப்பிடிப்பு நடத்த மறைமுகமாக தடை விதித்து விட்டது. 

கோடீஸ்வரர் சகோதரிகள் தனது தம்பிக்கு உதவக்கூடாதா? என்று பல்வேறு கருத்துக்கள் இழந்துள்ள நிலையில் கடன் பிரச்சனையால் ஸ்டுடியோ மூடப்பட்டது தவறு என்ற கண்டனங்கள் வலுத்து வருகிறது. 

அதுமட்டுமல்லாமல் 400 கோடி மதிப்புள்ள இந்த ஸ்டுடியோ வெறும் 6 லட்சம் கடனுக்காக மூடப்பட்ட இந்த பிரச்சனையை தற்போது சினிமா விமர்சகர் பயில்வான் ரங்கநாதன் பகிர்ந்திருக்கிறார். 

மேலும் பல சொத்துக்களுக்கு அதிபதியாக இருக்கக்கூடிய இந்த சகோதரிகள் தற்போது இந்த பணத்தை கட்டாவிட்டால் ஸ்டுடியோ கை நடுவி போகக்கூடிய நிலையில் உள்ள கதையைப் பயில்வான் பகிர்ந்து இருக்கிறார்.